வருமானம் சூப்பர்
2025 மே 20-ஆம் தேதி முதல் 2025 மே 26-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உயர்கல்வி படிக்க நினைப்பவர்கள் தாராளமாக முயற்சி செய்யுங்கள். இரண்டாவது திருமணத்திற்கு வாய்ப்புகள் உள்ளன. வேறு அலுவலகம் மாற வாய்ப்புள்ளது. தேவையில்லாத விஷயங்களில் தலையிடாதீர்கள். அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டி இருந்தால் செய்துகொள்ளலாம். குழந்தைகளுக்காக நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கும். உங்களுடைய வசதி வாய்ப்புகள் மற்றும் பொருளாதார நிலையைப் பார்க்கும்போது, வருமானமும் சம்பாத்தியமும் நன்றாகவே இருக்கும். உங்கள் முயற்சிகள் ஓரளவு வெற்றி அடையும். சொத்துக்கள் விற்பனையாகும். நல்ல வேலை கிடைக்கும். நீண்ட நாட்களாக வீடு, இடம் மாற வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு இந்த வாரம் மாற்றங்கள் உண்டாகும். நீங்கள் நம்பியவர்கள் உங்களுக்கு உண்மையாகவும், நேர்மையாகவும் இருப்பார்கள். வேலையில் கவனம் செலுத்துங்கள். வேலையில் நீங்கள் எதிர்பார்த்த நன்மைகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு ஓரளவுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். குறிப்பாக, அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருங்கள். இந்த வாரம் காளியையும், துர்க்கையையும் வழிபாடு செய்யுங்கள்.