உறவுகளால் நன்மை

Update:2025-09-23 00:00 IST

2025 செப்டம்பர் 23-ஆம் தேதி முதல் 2025 செப்டம்பர் 29-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் பணப்புழக்கம் நன்றாக இருக்கும். உங்கள் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். உங்கள் எண்ணங்கள் மற்றும் சிந்தனைகள் செயல்பாட்டுக்கு வரும். நீங்கள் நம்பிய காரியங்கள் அனைத்தும் நடைபெறும். உங்கள் பிரச்சனைகள் அனைத்தும் இறைவனின் அருளால் தீர்க்கப்படும். புதன் உங்கள் முயற்சி ஸ்தானத்தில் இருப்பதால், உங்களை நீங்களே வளர்த்துக் கொள்ளவும், புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ளவும் வாய்ப்புகள் அமையும். சமூக வலைதளங்களை திறம்படப் பயன்படுத்தி முன்னேறலாம். ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்பதன் மூலமும், புதிய படிப்புகளைத் தொடங்குவதன் மூலமும் உங்களை மேம்படுத்திக் கொள்ளலாம். பிரிந்த உறவுகள் மீண்டும் ஒன்றிணைவார்கள். உறவினர்களால் நன்மைகள் உண்டாகும். உங்கள் உழைப்புக்கு ஏற்ற வெற்றி நிச்சயம் உண்டு. சிறுதொழில், சுயதொழில் அல்லது ஆன்லைன் வணிகம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். கமிஷன், ரியல் எஸ்டேட், போக்குவரத்து, டிஜிட்டல் மார்க்கெட்டிங் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். வேலைவாய்ப்புகளில் நல்ல அங்கீகாரம் கிடைக்கும். சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் இணைந்து செயல்பட்டால் இருவருக்கும் லாபம் உண்டு. திருமண வாழ்க்கை சீராக இருக்கும். இந்த வாரம் நீங்கள் துர்கை மற்றும் மகாலட்சுமியை வழிபடுவது உங்கள் அதிர்ஷ்டத்தை மேம்படுத்தும்.

Tags:    

மேலும் செய்திகள்