வெற்றி நிச்சயம்

Update:2025-09-09 00:00 IST

2025 செப்டம்பர் 09-ஆம் தேதி முதல் 2025 செப்டம்பர் 15-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் உங்கள் ராசியில் சூரியன், புதன், சுக்கிரன் இருப்பதால் உங்கள் வாழ்வில் பெரிய மாற்றங்கள் ஏற்படும். பெரிய அளவில் தொழில் செய்பவர்களுக்கு ஓரளவுக்கு வருமானம் இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமண வாய்ப்புகள் அதிகம். இரண்டாம் திருமணம் எதிர்பார்த்திருப்பவர்கள் முயற்சிக்கலாம். உயர்கல்வி படிப்பவர்களுக்கு நல்ல பலன்கள் உண்டு. ஆராய்ச்சி மற்றும் பிஎச்.டி செய்பவர்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். வெளியூர், வெளி மாநிலம் அல்லது வெளிநாடுகளில் முதலீடு செய்ய வாய்ப்பு இருந்தால், அதை செய்யலாம். வேலை வாய்ப்பைப் பொறுத்தவரை, குரு மற்றும் சனி பகவானின் பார்வை இருப்பதால், ஏதோ ஒரு வகையில் வேலை அல்லது வருமானம் இருந்துகொண்டே இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அடையாளம் காண முடியாத வியாதிகள் வந்து செல்லும். கேட்ட இடத்தில் கடன் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் உண்டு. கலைத்துறையில் இருப்பவர்களுக்குப் புகழும், அந்தஸ்தும் கிடைக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு மிகப்பெரிய ஏற்றம், முன்னேற்றம் உண்டு. தொண்டர்களின் அன்பு ஆதரவு கிடைக்கும். சமூகத்தில் உங்கள் மதிப்பு மரியாதை கூடும். விளையாட்டுத் துறையில் இருப்பவர்களுக்கு விருதுகள் மற்றும் அங்கீகாரம் கிடைக்கும். பங்குச்சந்தை, ரேஸ், லாட்டரி, ஆன்லைன் பிசினஸ், டிரேடிங், மியூச்சுவல் ஃபண்ட், கோல்டு பாண்ட், டிஜிட்டல் கரன்சி போன்ற யூக வணிகங்களில் முதலீடு செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். குழந்தைகளுக்காகச் செலவு செய்ய வேண்டியிருக்கும். குழந்தைகளைப் பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படலாம். இந்த வாரம் விநாயகர் மற்றும் துர்கையை வழிபாடு செய்யுங்கள்.

Tags:    

மேலும் செய்திகள்