திட்டமிட்டு வெல்லுங்கள்
2025 ஆகஸ்ட் 05-ஆம் தேதி முதல் 2025 ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் ராசியில் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும். அதேசமயம், 12 ஆம் இடத்தில் சுக்கிரன், குரு இருப்பதால் தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் எதிர்பார்த்தவர்களுக்கு சுமாரான வாரம், குழந்தைகளால் சில மன வருத்தங்கள் வரலாம். இரண்டாம் இடத்தில் கேது சுக்கிரன் சாரம் பெறுவதால், வருமானத்திற்கு மேல் செலவுகள் இருக்கும். பணப்புழக்கம் அதிகமாக இருந்தாலும், செலவுகளும் அதிகரிக்கும். எதிர்பாராத பயணங்கள் மற்றும் அதனால் நன்மைகள் உண்டாகும். மூன்றாம் இடத்தில் செவ்வாய், சனி பார்ப்பதால் துணிச்சலான முடிவுகளை எடுக்க வேண்டிய காலகட்டம். எதை முதலில் செய்வது, எதை செய்தால் நன்மை என்பதை ஆராய்ந்து செயல்படுங்கள். உற்பத்தி மற்றும் உற்பத்தி சார்ந்த துறைகளில் உள்ளவர்களுக்கு விற்பனையும் லாபமும் குறைவாக இருக்கும். விவசாயத்தில் பெரிய லாபம் எதிர்பார்க்க முடியாது. விளையாட்டுத் துறையில் உள்ளவர்களுக்கு புகழும் விளம்பரமும் கிடைக்கும், விருதுகள், ஸ்பான்சர்ஷிப் வாய்ப்புகள் உண்டு. கலைத்துறையில் வருமானம், புகழ், அந்தஸ்து கூடும். பங்குச்சந்தை, ட்ரேடிங், ஆன்லைன் பிசினஸ், மியூச்சுவல் ஃபண்ட், ரேஸ், லாட்டரி போன்றவைகளில் குறைந்த முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். காளி மற்றும் பைரவரை வழிபடுவது நல்லது.