எதிர்பாராத பயணம்
2025 செப்டம்பர் 02-ஆம் தேதி முதல் 2025 செப்டம்பர் 8-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் சூரியன் மற்றும் புதன் ராசியில் இருப்பதால் தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும். ஆனால், 12-ம் இடத்தில் குருவும் சுக்கிரனும் இருப்பதால் மனைவி, குழந்தைகள் அல்லது பெண்களுக்காக செலவுகள் ஏற்படும். இந்த வாரம் வேலையை பொறுத்தவரை கண்டிப்பாக இருக்கிறது. ஆனால் வேலையில் மாற்றம், இடமாற்றம் அல்லது பதவி மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு அது நிறைவேறும். லோன் அப்ளை செய்திருந்தால், அது பெரும் போராட்டத்திற்கு பிறகு கிடைக்கும். இரண்டாம் இடத்தில் கேது சுக்கிரன் ஸ்தானத்தில் இருப்பதால் எவ்வளவு சம்பாதித்தாலும் செலவுகள் இருக்கும். தேவையற்ற செலவுகளை நீங்கள் சந்திக்க நேரிடும். முயற்சிகள் கைகூடும். வாழ்க்கையில் யாரை நம்பியிருக்கிறீர்களோ அவர்கள் உண்மையாகவும் நேர்மையாகவும் இருப்பார்கள். சமூக ஊடகங்களில் உங்கள் வளர்ச்சி அதிகமாக இருக்கும். புதிய சூழ்நிலைகள், புதிய இடங்களுக்கு மாற வேண்டியிருக்கும். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். எதிர்பாராத பயணமும் ஏற்படலாம். அதோடு வீடு மாற்றம், இடமாற்றம் நிகழ வாய்ப்புள்ளது. வீட்டை விற்க நினைப்பவர்களுக்கு இந்த வாரம் நல்ல விலை கிடைக்கும். துர்கை மற்றும் சித்தர்களை வழிபடுவது நல்லது.