பேச்சில் கவனம்

Update:2025-08-12 00:00 IST

2025 ஆகஸ்ட் 12-ஆம் தேதி முதல் 2025 ஆகஸ்ட் 18-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் பணப்புழக்கம் சராசரியாக இருக்கும். ஆகஸ்ட் 16-க்குப் பிறகு தேவையில்லாத விஷயங்களைப் பேசுவதைத் தவிர்க்கவும். உங்கள் வார்த்தைகள் தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்கக்கூடும். அதனால் பேச்சில் நிதானம் தேவை. நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். உங்கள் லட்சியங்களை நோக்கி தைரியமாகச் செயல்படுங்கள், வெற்றி நிச்சயம். ஆனால், சோம்பேறித்தனத்தைத் தவிர்த்து சுறுசுறுப்புடன் இருப்பது முக்கியம். ஒரு தெய்வீக சக்தி உங்களுக்குத் துணையாக இருந்து அருள் புரியும். நீண்ட நாட்களாக விற்கப்படாமல் இருந்த சொத்துக்கள் இந்த வாரம் விற்பனையாவதற்கான வாய்ப்புகள் அதிகம். விளையாட்டு மற்றும் கலைத் துறையினருக்கு நல்ல வருமானம், விருதுகள் கிடைக்கும். யூக வணிகத்தில் குறைந்த முதலீட்டில் லாபம் கிடைக்கும். கலைத் துறையினருக்குப் பெயரும் புகழும் உயரும், வருமானமும் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் கவனம் தேவை. பணியிடத்தில் மறைமுகமான பிரச்சனைகள் மற்றும் தொல்லைகள் உண்டாகலாம். வெளிய சொல்ல முடியாத பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும். பிரம்மாவையும் துர்கையையும் வழிபடுவது சிரமங்களைக் குறைக்கும்.

Tags:    

மேலும் செய்திகள்

பணவரவு