பேச்சில் கவனம்
2025 ஜூலை 29-ஆம் தேதி முதல் 2025 ஆகஸ்ட் 04-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
யாருக்கும் தேவையில்லாமல் பணம் கொடுக்கவோ அல்லது ஜாமீன் கையெழுத்திடவோ வேண்டாம். தேவையற்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். திருமண வாழ்வில் கவனமாக இருங்கள், கணவன்-மனைவி உறவில் பிரிவு அல்லது போராட்டங்கள் ஏற்படலாம். வியாபாரம் லாபம் வருவதுபோல் தோன்றும், ஆனால் சாதாரணமாகவே இருக்கும். வியாபாரத்திற்காக இந்த வாரம் கடன் வாங்குவது அல்லது பணப்புழக்கத்தை மேற்கொள்வது வேண்டாம். பேசும்போது கவனமாக இருங்கள், பேச்சால் பிரச்சனைகள் ஏற்படலாம். எந்த ஒரு முயற்சியையும் மேற்கொள்ளாமல் இருக்காதீர்கள். எதை முதலில் செய்ய வேண்டும், எதை இரண்டாவதாக செய்ய வேண்டும் என்று திட்டமிட்டுச் செயல்படுங்கள். மூன்றாம் இடத்தில் செவ்வாய் இருப்பதால் தைரியமாகச் செயல்படுவீர்கள். விளையாட்டுத் துறையில் இருப்பவர்களுக்கு ஏற்றம், முன்னேற்றம், விருதுகள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. அரசு அங்கீகாரம் கிடைக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். சமூக நடவடிக்கைகள் அதிகரிக்கும். வேலை வாய்ப்புகள் நன்றாக இருக்கும். வேலை மாற்றம், இட மாற்றம், கம்பெனி மாற்றம் அல்லது வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு வாய்ப்புகள் அதிகம். இந்த வாரம் துர்க்கையையும், காளியையும் வழிபடுவது மிகவும் முக்கியம்.