தன்னம்பிக்கை உயரும்

Update:2025-08-19 00:00 IST

2025 ஆகஸ்ட் 19-ஆம் தேதி முதல் 2025 ஆகஸ்ட் 25-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் உங்கள் ராசியில் சூரியன், புதன் இருப்பதால் தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். கடந்த காலங்களில் நீங்கள் யோசித்த விஷயங்கள் நிறைவேறும். நீங்கள் நம்பியவர்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள். சமூக ஊடகங்கள் மற்றும் தகவல் தொடர்புகளைப் பயன்படுத்த வாய்ப்பு கிடைக்கும். புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளவும், உங்களை மேம்படுத்திக் கொள்ளவும் வாய்ப்புகள் உண்டு. சிறுதொழில், சுயதொழில், ஆன்லைன் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். இந்த வாரம் எதிர்பாராத பயணங்கள் ஏற்படும், அவை நன்மை தரும். உங்கள் திட்டங்கள் அனைத்தும் வெற்றி பெறும். இந்த வாரம் நீங்கள் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். சோம்பலை தவிர்க்க வேண்டும். எந்த ஒரு செயலையும் தள்ளிப் போட வேண்டாம். எது முக்கியம் என்பதை முடிவு செய்து அதை செயல்படுத்துங்கள். வேலைவாய்ப்பில் போராட்டங்களும், நிம்மதியற்ற சூழ்நிலைகளும் இருக்கும். நீங்கள் உழைத்ததற்கான பெயரை மற்றவர்கள் பெறலாம். எட்டாம் இடத்தில் ராகுவும், குருவும் பார்ப்பதால் தேவையில்லாத விஷயங்களில் தலையிடாதீர்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். துர்கையையும், காளியையும் வழிபடுவது நல்லது.

Tags:    

மேலும் செய்திகள்