நல்ல வாய்ப்புகள்

Update:2025-07-15 00:00 IST

2025 ஜூலை 15-ஆம் தேதி முதல் 2025 ஜூலை 21-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் உங்கள் ராசியில் சூரியன், புதன் இருப்பதால், உங்களின் எண்ணங்கள், சிந்தனைகள் செயலாக்கம் பெறும். இரண்டாம் இடத்தில் செவ்வாய், கேது இருப்பதால் பேச்சைக் குறைப்பது நல்லது. தேவையற்ற விஷயங்களைப் பேசுவதைத் தவிர்க்கவும். ஏனெனில் பேச்சால் பிரச்சனைகள் வரலாம். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். எதிர்பார்த்த மற்றும் எதிர்பாராத செய்திகள் உங்களுக்கு சாதகமாக வரும். உங்களை மேம்படுத்திக்கொள்ளவும், வெளிப்படுத்திக்கொள்ளவும் இது ஒரு நல்ல வாரம். உறவுகளால் நன்மை, மகிழ்ச்சி, நற்பலன்கள் கிடைக்கும். சிறு தொழில், சுய தொழில், வீட்டிலிருந்து செய்யும் வியாபாரம், ஆன்லைன் வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த வாரம் பரவாயில்லை. கல்வி மிகச் சிறப்பாக இருக்கும். ஆனால் உயர் கல்வியில் ஒரு சிறிய தடை ஏற்பட வாய்ப்பு உண்டு. உற்பத்தி சார்ந்த துறைகளில் உள்ளவர்களுக்கு உற்பத்திக்கு ஏற்ப விற்பனை மற்றும் லாபம் கிடைக்கும். இந்த வாரம் கடன்கள் வாங்கி நிரந்தர சொத்துக்கள் அல்லது வீட்டு உபயோகப் பொருட்கள், வாகனங்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டு. விளையாட்டில் உள்ளவர்களுக்கு விருதுகள், பரிசுகள் அல்லது அரசு ஆதரவு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். பங்குச்சந்தை, வர்த்தகம், ஆன்லைன் வியாபாரம் ஆகியவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு இந்த வாரம் பரவாயில்லை. லாட்டரி சீட்டு வாங்க நினைப்பவர்களுக்கும் இந்த வாரம் சாதகமாக இருக்கும். துர்க்கையையும் காளியையும் வழிபடுவது நல்லது.

Tags:    

மேலும் செய்திகள்

பணவரவு