பேச்சில் கவனம்

Update:2025-06-03 00:00 IST

2025 ஜூன் 03-ஆம் தேதி முதல் 2025 ஜூன் 09-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர். 

நீங்கள் உழைத்துச் சம்பாதித்த பணம் கையில் இருக்கும். ஆனால், அதே சமயம் உங்கள் பேச்சில் கவனமாக இருக்க வேண்டும். ஜூன் 7-ம் தேதிக்குப் பிறகு பேசுவதைக் குறைத்து, மற்றவர்கள் பேசுவதைக் கேளுங்கள். மற்றவர்களுக்குக் `கவுண்டர்' கொடுப்பதைத் தவிருங்கள், ஏனெனில் உங்கள் பேச்சே உங்களுக்குப் பிரச்சனைகளை உருவாக்கும். இந்த வாரம் எதிர்பாராத பயணச் செலவுகள் ஏற்படலாம்; முடிந்தால், பயணத்தைத் தள்ளிப்போடுங்கள். உறவுகளால் தேவையற்ற மன வருத்தங்களும், பிரச்சனைகளும் ஏற்படும். நீண்ட நாட்களாக விற்காமல் இருந்த சொத்து எதிர்பார்த்த விலைக்கு போக வாய்ப்புகள் உள்ளன. புதிய சொத்து வாங்க திட்டமிட்டிருந்தால் தாராளமாக வாங்கலாம். உங்கள் கல்வி சிறப்பாக இருக்கும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்குத் தங்கள் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். விளையாட்டுத் துறையில் இருப்பவர்களுக்கு விருதுகள், அங்கீகாரங்கள் மற்றும் நல்ல ஸ்பான்சர்ஷிப் கிடைக்கும். அரசியலில் இருப்பவர்களுக்குப் புகழும் பிரபலமும் கூடும். எதிர்பாராத பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். உங்கள் தொழில் சிறப்பாக இருக்கும். வேலையில் எதிர்பார்த்த முன்னேற்றங்கள், பதவி உயர்வுகள், மற்றும் சம்பள உயர்வு ஆகியவை கிடைக்கும். வராத பணங்கள் வந்து சேரும். வேலை இல்லாதவர்களுக்கு ஏதாவது ஒரு வேலையின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். இந்த வாரத்தில் காளி கோயில்களுக்குச் சென்று வழிபடுவதுடன், சந்தர்ப்பம் கிடைத்தால் சித்தர்களின் ஜீவ சமாதிக்குச் சென்று வாருங்கள்.

Tags:    

மேலும் செய்திகள்

பணவரவு