திட்டமிடல் தேவை

Update:2025-07-01 00:00 IST

2025 ஜூலை 01-ஆம் தேதி முதல் 2025 ஜூலை 07-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் வருமானங்கள் இருந்தாலும், செலவுகள் அதிகரிக்கும். குறிப்பாக தந்தையாலும், குழந்தைகளாலும் செலவுகள் ஏற்படக்கூடும். பேச்சைக் குறைத்து, நிதானமாகப் பேசுவது நல்லது. முயற்சிகள் ஓரளவு வெற்றியடையும். தேவையற்ற குழப்பங்களைத் தவிர்த்து, எதை முதலில் செய்ய வேண்டும் என்பதில் தெளிவு பெறுங்கள். சில விஷயங்களை யோசிக்காமல் செய்யவும், சிலவற்றைத் தள்ளிப் போடவும். கிரக நிலைகளுக்கு ஏற்ப உங்களை மாற்றிக்கொள்ள வேண்டிய வாரம் இது. உங்கள் ராசியில் புதன் இருப்பதால், உங்களின் இலக்குகள், திட்டங்கள் மற்றும் அதை எப்படி வெற்றிகரமாக செயல்படுத்துவது என்பதைத் திட்டமிட இது சிறந்த நேரம். நீண்ட நாட்களாக விற்காத சொத்துக்கள் இந்த வாரம் விற்பதற்கான வாய்ப்புகள் அதிகம். வேலையில் கவனம் செலுத்துங்கள்; வேலை இருந்தாலும் தடைகளும் மறைமுகத் தொல்லைகளும் இருக்கும். மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களுடன் அட்ஜெஸ்ட் செய்து போவது நல்லது. திருமண வாழ்க்கை சுமாராக இருக்கும். ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில்கள் செய்பவர்களுக்கு இந்த வாரம் பரவாயில்லை. ஏற்றுமதி செய்பவர்களுக்கு நிலுவையில் உள்ள பணம் கிடைக்கும். பெரிய அளவில் விளையாட்டுத் துறையில் இருப்பவர்களுக்கு விருதுகள், ஸ்பான்சர்ஷிப் மற்றும் அரசு அங்கீகாரம் கிடைக்கும். காளி மற்றும் சிவபெருமானை வழிபடவும்.

Tags:    

மேலும் செய்திகள்

பணவரவு