போராட்ட காலம்

Update:2024-02-20 00:00 IST

2024 பிப்ரவரி 20 முதல் 26-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

பொருளாதார நிலைகள் பரவாயில்லை. புதிய முயற்சிகள் வேண்டாம். தேவையில்லாத எந்த விஷயங்களிலும் தலையிட வேண்டாம். நெருங்கிய உறவுகளால் பிரச்சினைகள், போராட்டங்கள் உண்டு. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு பெரிய அளவில் லாபம் இல்லை. மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்துங்கள். அம்மாவின் அன்பு, ஆதரவு கிடைக்கும். சொந்த தொழில் பரவாயில்லை என்னும்படி இருக்கும். திருமண வாழ்க்கை சுமாராக இருக்கும். தொழிலாக இருந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும் இந்த வாரம் உங்களுக்கு எல்லாமே போராட்டம்தான். ஆனால் எது, எப்படி இருந்தாலும் உங்கள் கௌரவம், புகழ், அந்தஸ்து காப்பாற்றப்படும். அரசாங்கத்தால் எப்போதும் நற்பலன் இருந்து கொண்டே இருக்கும். வேலையில் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்கும். பெருமாள் மற்றும் சிவ தலங்களில் பைரவர் வழிபாடு செய்வது நன்மையை தரும்.

Tags:    

மேலும் செய்திகள்

பணவரவு