எச்சரிக்கை
2024 மார்ச் 5-ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
வேலையில் முன்னேற்றம் ஏற்படும். அதே நேரம் டென்ஷன், பணிச்சுமை, அழுத்தம் ஆகியவை அதிகமாக இருக்கும். தேவையில்லாமல் கடன் வாங்காதீர்கள். யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வருமானம் இருந்தாலும் அதற்கேற்ற செலவினங்கள் இருந்து கொண்டே இருக்கும். எல்லா விஷயங்களிலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உற்பத்தி துறையில் இருப்பவர்கள் பொறுமையாக இருக்க வேண்டிய காலம். உயர்கல்வியை தொடர நினைப்பவர்களும் , நீண்ட தூர பயணம் மேற்கொள்ள நினைப்பவர்களும் இந்த வாரம் 7-ஆம் தேதிக்கு பிறகு எல்லாவிதமான முயற்சிகளையும் மேற்கொள்ளுங்கள். குறிப்பாக இந்த வாரம் தேவையில்லாத விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. குரு பகவான் 10ம் இடத்தில் இருப்பதனால் உங்களது புகழ் அந்தஸ்து கூடும். இன்னொருபுறம் கவுரவத்தை குறைக்கும் வகையில் சின்ன சின்ன பிரச்சினைகள் வந்து போகும். புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். மிகவும் கவனமுடன் இருப்பது நல்லது. குலதெய்வ வழிபாடு, சிவன் மற்றும் ஆஞ்சநேயர் தரிசனம் சிறந்தது.