மங்களகரமான காலம்

Update:2024-04-23 00:00 IST

2024 ஏப்ரல் 23-ஆம் தேதி முதல் ஏப்ரல் 29-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் தேவை இருந்தால் மட்டும் கடன் வாங்குங்கள். இல்லையென்றால் பொறுமையாக இருங்கள். கிரகங்கள் மாறியிருப்பதால் கடந்த காலத்தில் இருந்த கஷ்டங்கள் எல்லாம் நீங்கி, இறையருளை பெறுவீர்கள். வேறு அலுவலகம் மாற நினைப்பவர்கள் மாறலாம். பொருளாதார பிரச்சினைகள் இல்லை. வருமானங்கள், சம்பாத்தியங்கள் உண்டு. எதிர்பாராத முயற்சிகள் நன்மையாக அமையும். வீடு மாற நினைப்பவர்கள் மாறலாம். நினைப்பவை அனைத்தும் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இளைய சகோதர - சகோதரிகளாலும், உறவுகளாலும் நன்மைகள் ஏற்படும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பரவாயில்லை. ஷேர் மார்க்கெட், டிரேடிங், டிஜிட்டல் கரன்சி, கோல்ட் பாண்ட், மியூச்சுவல் பண்ட் போன்றவற்றில் முதலீடு செய்யுங்கள். எதிர்காலத்தில் நல்லதொரு ரிட்டன்ஸ் கிடைக்கும். வேலை நன்றாக உள்ளது. எதிர்பார்த்த முன்னேற்றங்கள் அமையும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். தொழில் நன்றாக உள்ளது. புதிய காதல் மலர வாய்ப்புள்ளது. இந்த வாரம் முருகன் மற்றும் பெருமாளை வழிபடுவது நல்லது.  

Tags:    

மேலும் செய்திகள்

பணவரவு