குழந்தை பாக்கியம்

Update:2025-08-12 00:00 IST

2025 ஆகஸ்ட் 12-ஆம் தேதி முதல் 2025 ஆகஸ்ட் 18-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் பணப்புழக்கம் சீராக இருக்கும். பேச்சால் வருமானம் ஈட்டுபவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். குரு மற்றும் சுக்கிரன் உங்கள் ராசியில் இருப்பதால் எதிர்பாராத ஆலய தரிசனங்களும் தெய்வ தரிசனங்களும் உண்டாகும். ஆவணி மாத பிறப்பின் காரணமாக குடும்பத்தில் சுப காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் அல்லது அது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெறும். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் எதிர்பார்த்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. குழந்தைகளால் மகிழ்ச்சியும், சந்தோஷமும் உண்டாகும். விவசாயம் ஓரளவு லாபம் தரும். உற்பத்தி சார்ந்த தொழிலில் உள்ளவர்களுக்கு விற்பனை மற்றும் லாபம் சீராக இருக்கும். நான்காம் இடத்தை சனி பார்ப்பதால், உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. குறிப்பாக தாயாரின் உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. ஆனால், வேலையில் சிறு சிறு மன வருத்தங்கள் இருக்கலாம். வேலையை ரசித்து செய்வது இந்த வாரம் முக்கியம். பதவி உயர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் வெற்றி வாய்ப்புகள் அதிகம். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. வியாபாரம் சுமாராக இருக்கும். பெரிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. மகாவிஷ்ணு மற்றும் துர்கையை வழிபடுவது நற்பலன்களைத் தரும்.

Tags:    

மேலும் செய்திகள்