மகிழ்ச்சி அதிகரிக்கும்

Update:2025-09-30 00:00 IST

2025 செப்டம்பர் 30-ஆம் தேதி முதல் 2025 அக்டோபேர் 06-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம், நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும் இருப்பீர்கள். நாட்பட்ட நோய்கள் இருப்பவர்களுக்கு, இந்த வாரம் நோயிலிருந்து மீண்டு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதுமட்டுமல்ல, கடன் தொல்லையால் அவதிப்படுபவர்களுக்கு, ஏதேனும் ஒரு வகையில் கடன் குறைய வாய்ப்புள்ளது. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழ், வருமானம், சம்பாத்தியம் கூடும். விளையாட்டுத் துறையில் இருப்பவர்களுக்கு விருதுகளும், அங்கீகாரமும் கிடைக்கும். நிதியுதவி எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு அது கிடைக்கும். யூக வணிகங்களில் சாதாரண முதலீடுகள் செய்யலாம். அது உங்களுக்கு வருமானத்தைத் தரும். உங்கள் குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியும், சந்தோஷமும் உண்டாகும். எதிர்பாராவிதமாக ஆலய தரிசனம் கிடைக்கும். வேலைவாய்ப்பில் கவனம் தேவை. வேலையை விட்டு வெளியேறவோ அல்லது வெளியேற்றப்படவோ வாய்ப்புகள் அதிகம். உயர் கல்வி படிக்க நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளது. வெளிநாடு செல்ல விசா அல்லது பாஸ்போர்ட் எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு அது கிடைக்கும். தொழில் முனைவோர்களுக்கும், தொழில் அதிபர்களுக்கும் இந்த வாரம் நல்ல வாரமாக இருக்கும். இந்த வாரம் நீங்கள் முருகப்பெருமானையும், சிவன் கோவிலில் உள்ள பிரம்மாவையும் வழிபடவும்.

Tags:    

மேலும் செய்திகள்