நண்பர்களால் பிரச்சனை
2025 செப்டம்பர் 02-ஆம் தேதி முதல் 2025 செப்டம்பர் 8-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் குருவும் சுக்கிரனும் ராசியிலும், சனி ஏழாம் இடத்திலும் இருப்பதால், திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு திருமண வாய்ப்புகள் உருவாகும். திருமணப் பேச்சுவார்த்தைகள் நடக்கும். வியாபாரம் வழக்கம் போல இருக்கும், வருமானம் உண்டு. ஆனால், பார்ட்னர்ஷிப் வியாபாரத்தில் பார்ட்னர் மட்டுமே லாபம் அடைவார். உங்களுக்கு பெரிய வரவு இருக்காது. இருப்பினும் புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு இந்த வாரம் நல்ல வாய்ப்புகள் உண்டு. பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். உயர்கல்வி சிறப்படையும். விவசாயம் செய்பவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். பேச்சையே தொழிலாகக் கொண்டவர்களுக்கு அதிலிருந்து நல்ல வருமானம் வரும். வேலையில் திருப்தியற்ற மனநிலை இருந்தாலும் வேலைக்கு எந்தப் பிரச்சனையும் வராது. லோன் அப்ளை செய்திருந்தால், அது கிடைக்கும். லோன் பெற்று வீடு, நிலம், அல்லது வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டு. பழைய பொருட்களை மாற்றிப் புதிய பொருட்கள் வாங்குவதற்கும் வாய்ப்பு உண்டு. வெளிநாட்டு விசா, பாஸ்போர்ட் நிலுவையில் இருந்தால் அது கிடைக்கும். நண்பர்களால் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எவ்வளவு முயற்சி எடுக்கிறீர்களோ அந்த அளவுக்கு வருமானமும், அந்தஸ்தும் உயரும். முருகன் மற்றும் ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.