எதிர்பாராத செலவுகள்
2025 ஆகஸ்ட் 19-ஆம் தேதி முதல் 2025 ஆகஸ்ட் 25-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் உங்கள் நிதி நிலைமை பரவாயில்லை. ஆனால், ராசிக்கு 12-ல் சுக்கிரன் இருப்பதால், மனைவி, குழந்தைகள் அல்லது நெருங்கிய உறவினர்களுக்காக எதிர்பாராத செலவுகள் ஏற்படும். வருமானம் நன்றாக இருக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் சுமாராக இருக்கும். உறவுகளால் நன்மையும், அதேசமயம் பிரச்சனைகளும் இருக்கும். நெருங்கிய உறவுகளிலிருந்து பிரிந்து செல்ல நேரிடலாம். வீடு, இடம், ஊர் மாற நினைத்தவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் உண்டாகும். எதிர்பாராத பயணங்களும் இந்த வாரம் நிகழலாம். நீங்கள் எதிர்பார்த்த செய்திகள் வருவதில் தாமதம், தடை இருக்கும். யாரை நம்பியிருக்கிறீர்களோ, அவர்கள் உங்களுக்கு சாதகமாக இல்லாமல் போகலாம். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. திருமணம் தள்ளிப்போனவர்களுக்கு, இந்த வாரம் அதற்கான பேச்சுவார்த்தைகள் நடக்கும் வாய்ப்பு உண்டு. பெரிய அளவில் வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த வாரம் சுமாராக இருக்கும். சொந்தத் தொழிலில் தொழில் தகராறு, நிச்சயமற்ற தன்மை இருக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் தள்ளிப்போனவர்களுக்கு இந்த வாரம் நல்ல காரியங்கள் நடக்கும் வாய்ப்புகள் அதிகம். மகாலட்சுமியையும், பெண் தெய்வங்களையும் வழிபடுவது நல்லது.