தேடுதல் இருக்கும்
2025 ஆகஸ்ட் 26-ஆம் தேதி முதல் 2025 செப்டம்பர் 1-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் உங்கள் பொருளாதார நிலை பரவாயில்லை. கையில் பணப் புழக்கம் இருக்கும். தெய்வ அனுகூலம் கிடைக்கும். தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நீங்கள் புகழ் மற்றும் பொதுமக்களின் அங்கீகாரத்தை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். உங்கள் உறவுகளால் மகிழ்ச்சியும் சந்தோஷமும் உண்டாகும். நீண்ட நாட்களாக வீடு மாற நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய சூழ்நிலைகள் மற்றும் புதிய இடங்களில் உங்கள் வாழ்க்கை அமையலாம். தேடுதல் அதிகமாக இருக்கும். தேவையற்ற சிந்தனைகளை தவிர்க்கவும். போதுமான உறக்கம் அவசியம். எவ்வளவு உழைத்தாலும் வேலையில் ஒரு திருப்தியற்ற மனநிலை இருக்கும். கடன் விண்ணப்பித்தவர்களுக்கு அது கிடைக்கும். நிலம், வண்டி அல்லது வீட்டு உபயோக பொருட்கள் வாங்க வாய்ப்புகள் உண்டு. வியாபாரம் செய்பவர்களுக்கு வருமானம் நன்றாக இருக்கும். ஒன்றுக்கும் மேற்பட்ட வியாபாரங்களில் லாபம் கிடைக்கும். உங்கள் அந்தஸ்து மற்றும் புகழ் கூடும். தொழில் முனைவோராக ஆக நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உண்டு. பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். உங்கள் நட்புகளை பேணிக்காப்பது முக்கியம். உயர் கல்விக்கு நல்ல வாய்ப்புகள் உண்டு. நீண்ட பயணம் செல்வதற்கான திட்டங்களை தீட்டுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திருமணத்திற்கான வாய்ப்பு உண்டு. இந்த வாரம் உங்கள் இஷ்ட தெய்வத்தையும், முருகப்பெருமானையும் வழிபடுவது நல்லது.