வாக்கில் கவனம் தேவை

Update:2023-09-26 00:00 IST

2023, செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 2-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஜோதிட வித்யாபதி எம். ஆர். கருணாகரன்

பொருளாதாரம் மற்றும் குடும்பத்தில் பிரச்சினைகள் வரும். இதிலிருந்து விடுபட, காலாஸ்ரீ, திருநாகேஸ்வரம் சென்றுவருவது நல்லது. 26ஆம் தேதி லாபகரமான விஷயங்கள் நடக்கும். 27, 28 தேதிகளில் குடும்பம், பொருளாதாரத்தில் சிறு விரயம் ஏற்படும். கவனத்துடன் செயல்பட்டால் தேவையற்ற விரயங்களை தவிர்க்கலாம். 29, 30 தேதிகளில் மனக் குழப்பம் தேவையற்ற பிரச்சினைகளை உண்டுபண்ணும். எனவே தேவையற்ற பிரயாணங்களை தவிர்ப்பது நல்லது. 1, 2 தேதிகளில் வாக்கில் கவனமும், குடும்பத்தில் பொறுப்புடனும் செயல்பட வேண்டும். வெள்ளை நிறம் ஆரம்பத்தில் வெற்றியையும், பின்பு பிரச்சினையையும் ஏற்படுத்தும். பயணம் மற்றும் சாகசங்களில் வெள்ளை நிறத்தை தவிர்ப்பது நல்லது. 

Tags:    

மேலும் செய்திகள்