ஆண் நண்பர்களால் ஏற்றம்
2025 ஏப்ரல் 29-ஆம் தேதி முதல் 2025 மே 05-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்களை அறியாத மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. இறைவனுடைய அனுகிரகம், அனுகூலம் இருக்கிறது. தொடர்ந்து முயற்சி எடுங்கள். அப்போதுதான் பெரிய அளவில் வெற்றி பெறுவீர்கள். தொழிலில் லாபம் வருவது போல் தோற்றம். ஆனால், கைக்கு வருவதில் தடை இருக்கிறது. மணவாழ்க்கை மகிழ்ச்சி, சந்தோஷகரமாக இருக்கும். புதிய காதல் மலர வாய்ப்புள்ளது. உங்கள் காதல் வெற்றியடைவதில் நிறைய தடைகள் இருக்கிறது. எது எப்படி இருந்தாலும் உங்களின் கௌரவம், அந்தஸ்து, புகழ் கூடுவதற்கான வாய்ப்பு உள்ளது. எதிர்பாராத தெய்வ தரிசனம், ஆலய தரிசனம் இருக்கிறது. கடன் குறைய வாய்ப்புகள் உள்ளன. வேலையில் கவனம் செலுத்துங்கள். வேலையில் மாற்றம் செய்ய நினைப்பவர்கள் செய்யுங்கள். இரண்டாம் திருமணத்திற்கு முயற்சி செய்யுங்கள். ஆண் நண்பர்கள் ஏதோ ஒருவிதத்தில் உதவி செய்வார்கள். அவர்களால் உங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றம், ஏற்றம், முன்னேற்றம் இருக்கும். உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுங்கள். இந்த வாரம் முழுவதும், துர்க்கை மற்றும் விநாயகரை வழிபாடு செய்யுங்கள்.