எதிரிகளை வெற்றி கொள்வீர்கள்
2025 மே 20-ஆம் தேதி முதல் 2025 மே 26-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்களுடைய முயற்சிகள் பெரிய அளவில் வெற்றி பெறுவதற்கான சூழ்நிலைகள் உருவாகும். வருமானத்திற்கு ஏற்ப நிறைய செலவுகளும் ஏற்படும். பொருளாதார வசதி நன்றாக இருந்தால், நிலையான சொத்துக்கள் வாங்குவது நல்லது. இடம், வீடு, வண்டி வாகனங்கள் அல்லது வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதற்கான வாய்ப்பும், சந்தர்ப்ப சூழ்நிலையும் இருக்கிறது. வேலை வாய்ப்புகளைப் பொறுத்தவரை, பதவி உயர்வு, ஊதிய உயர்வுக்கான வாய்ப்புகள் உள்ளன. உங்களுடன் வேலை செய்பவர்களின் ஆதரவும், மேலதிகாரிகளின் ஒத்துழைப்பும் உங்களுக்குக் கிடைக்கும். எப்படி இருந்தாலும், இந்த வாரத்தில் உங்கள் அந்தஸ்து, கௌரவம் அதிகரிக்கும். குடியுரிமைக்காக விண்ணப்பித்துவிட்டு காத்திருப்பவர்களுக்கு, நல்ல செய்தி வர வாய்ப்புள்ளது. தொழில் நன்றாக இருக்கும். தொழிலில் எதிர்பார்த்த லாபம், வருமானம், சம்பாத்தியம் ஆகியவை பெரிய அளவில் இருக்கும். உங்களுடைய மணவாழ்க்கை மகிழ்ச்சிகரமாகவும், சந்தோஷமாகவும் இருப்பதற்கான சூழ்நிலைகள் உண்டு. இரண்டாவது திருமணத்திற்கு வாய்ப்புகள் உள்ளன. பெரிய தொழிலதிபராகவோ, தொழில் முனைவோராகவோ வர நினைப்பவர்களுக்கு, அதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. கல்வி நன்றாக இருக்கும். சொத்து விற்பதில் கவனம் தேவை. யூக வணிகங்களில் முதலீடு செய்வதாக இருந்தால், கவனமாக செய்யுங்கள். உங்கள் எதிரிகள் அனைவரையும் வெற்றி கொள்வீர்கள். இந்த வாரத்தில் நீங்கள் துர்க்கையையும், காளியையும் பிரதானமாக வழிபடுங்கள்.