சொத்துக்களை வாங்குவீர்கள்

Update:2025-06-17 00:00 IST

2025 ஜூன் 17-ஆம் தேதி முதல் 2025 ஜூன் 23-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கும், தொழில்முனைவோர்களுக்கும் சாதகமான கிரக நிலைகள் உள்ளன. அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். முயற்சிகளில் தடைகள் இருந்தாலும், பணப்புழக்கம் நன்றாக இருக்கும். வெளிநாடுகளில் முதலீடு செய்யவும், வெளிநாட்டுத் தொடர்புகளால் நன்மை அடையவும் வாய்ப்புள்ளது. பாஸ்போர்ட், விசா எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு சாதகமான தகவல்கள் வரும். ஆராய்ச்சி மற்றும் பி.ஹெச்.டி. படிப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். நிரந்தர சொத்துக்கள் வாங்கலாம். பங்குச்சந்தை, லாட்டரி போன்ற யூக வணிகங்களைத் தவிர்க்கவும். புதிய காதல் அமைய வாய்ப்புள்ளது. ஆனால் ஏற்கனவே காதலில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை இல்லை. பணியிடத்தில் திருப்தியற்ற மனநிலை இருக்கும். சக ஊழியர்களுடன் இணக்கமாக இருங்கள். வியாபாரத்தில் ஒருவித நிச்சயமற்ற தன்மை இருந்தாலும், முழுமையாக பாதிப்பு இருக்காது. நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். இந்த வாரம், காளியையும், பைரவரையும் வழிபடுவது வாழ்வில் மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் தரும்.

Tags:    

மேலும் செய்திகள்