யாரையும் நம்ப வேண்டாம்
By : ராணி
Update:2024-02-13 00:00 IST
2024 பிப்ரவரி 13 முதல் பிப்ரவரி 19-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் முழுவதும் பொருளாதார நிலைகள் நன்றாக உள்ளது. பேச்சின் மூலமாக சம்பாதிப்பவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் தடை இருப்பதால் கவனமாக செயல்படுவது நல்லது. கிரக நிலைகள் சரியில்லாததால் தேவையில்லாமல் யாரையும் நம்ப வேண்டாம். பொறுமையாகவும், நிதானமாகவும் செயல்படுவது நல்லது. வேலையில் எந்த பிரச்சினையும் இல்லை. உடல் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம். சொந்த தொழில் ஓரளவு லாபகரமாக இருக்கும். மனவாழ்க்கை மகிழ்ச்சியை தரும். குழந்தைகளால் நன்மைகள் உண்டாகும். ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில்களை தொடங்க வாய்ப்புள்ளது. இந்த வாரம் முழுவதும் சனி பகவானை வழிபடுவது சிறந்தது.