புதிய வேலைவாய்ப்பு
2025 ஜூலை 29-ஆம் தேதி முதல் 2025 ஆகஸ்ட் 04-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
நிறைய வருமான வாய்ப்புகள் உண்டாகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் ஓரளவு வெற்றி பெறும், ஆனால் இந்த வாரம் சற்று நிதானமாகச் செயல்படுவது நல்லது. உங்கள் எண்ணங்களும், சிந்தனைகளும் பெரியதாக இருக்கலாம், ஆனால் அவை உடனடியாகச் செயலாக்கம் பெறுவதற்கான வாய்ப்பு குறைவு. தேவையற்ற மனக்குழப்பங்களையும், சிந்தனைகளையும் தவிர்க்கவும், பொறுமையாக இருங்கள். அம்மாவின் உடல் ஆரோக்கியத்திலும், உங்கள் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துங்கள். வேலைவாய்ப்புகள் நன்றாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு, குறிப்பாக வயதானவர்களுக்கு, வேலைக்கான வாய்ப்புகள் உண்டு. வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். வேலையில் அதிக முயற்சி தேவைப்படும், உங்கள் உழைப்பு அங்கீகரிக்கப்படும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு, போனஸ், அரியர்ஸ் போன்றவற்றை எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு இந்த வாரம் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. கடன் விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். எந்த காரணத்திற்காக கடன் வாங்குகிறீர்களோ, அவை அனைத்தும் பூர்த்தி ஆகும். அவசர, அவசியத்திற்காக கடன் வாங்குவதைத் தவிர்க்கவும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. குழந்தைகளால் நன்மையும், மகிழ்ச்சியும் உண்டாகும். இந்த வாரம் சிவனையும், பெருமாளையும் வழிபடுவது நல்லது.