தொழிலில் நல்ல லாபம்
2025 செப்டம்பர் 02-ஆம் தேதி முதல் 2025 செப்டம்பர் 8-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் உங்கள் ராசியை குரு, சனி, சுக்கிரன் பார்ப்பதால் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் அதிலிருந்து மீண்டு வருவீர்கள். சிறு தொழில், சுயதொழில், ஆன்லைன் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். எதிர்பாராத பயணம் உண்டு. அந்த பயணத்தில் சில தடங்கல்கள் இருந்தாலும் மகிழ்ச்சியைத் தரும். வீடு, இடம், ஊர் மாற்றங்கள் ஏற்படும். மேலும் நீங்கள் செய்யும் எந்த ஒரு வியாபாரமும் சுமாரான லாபத்தை தந்தாலும், உங்களது உடல் ஆரோக்கியத்திலும், தாயாரின் உடல் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். நண்பர்களால் தேவையற்ற மன உளைச்சல்கள் ஏற்படும். அவமானங்களும், சங்கடங்களும் ஏற்பட்டு விலகும். வேலையில் திருப்தியற்ற மனநிலை இருக்கும். கிடைத்த வேலையை மகிழ்ச்சியுடன் செய்யுங்கள். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழ், அந்தஸ்து கூடும். பங்குச்சந்தை, லாட்டரி, ஆன்லைன் பிசினஸ் போன்றவற்றில் லாபம் கிடைக்கும். இந்த வாரம் பெருமாள் மற்றும் சிவனை வழிபடுவது நல்லது.