நம்பியவர்கள் உதவுவர்
2025 செப்டம்பர் 23-ஆம் தேதி முதல் 2025 செப்டம்பர் 29-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் உயர்கல்வி உங்களுக்கு சாதகமாக இருக்கும். உற்பத்தித் துறையில் இருப்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். விவசாயத்தில் நல்ல மகசூல் கிடைக்கும். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். குரு பகவானின் அருளால் உங்கள் எண்ணங்கள் மற்றும் சிந்தனைகள் செயல்பாட்டுக்கு வரும். நீங்கள் நம்பியவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். உங்கள் பிரச்சனைகளைத் தீர்க்க யாராவது ஒருவர் நிச்சயம் வருவார். உறவுகளால் நன்மை மற்றும் மகிழ்ச்சி உண்டாகும். விற்பனையாகாமல் இருந்த சொத்துக்கள் விற்பதற்கான வாய்ப்பு உண்டு. மேலும் சமூக ஊடகங்களை மேம்படுத்தி, புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது. வேலைவாய்ப்பில் திருப்தியற்ற சூழ்நிலை இருந்தாலும், வேலைக்கு பஞ்சம் இருக்காது. உங்கள் தொழிலில் அந்தஸ்து, புகழ், வருமானம் கூடும். இரண்டாம் திருமணம் செய்ய நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உண்டு. பெரியளவில் பாஸ்போர்ட், விசா போன்றவற்றுக்காக விண்ணப்பித்தவர்களுக்கு நல்ல செய்தி வரும். தந்தையின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். மனநிலையை மாற்றி, சுறுசுறுப்பாகச் செயல்படுவது அவசியம். இந்த வாரம் நீங்கள் ஆஞ்சநேயர் மற்றும் நரசிம்மரை வழிபடுவது நல்லது.