காரியங்கள் கைகூடும்

Update:2025-09-30 00:00 IST

2025 செப்டம்பர் 30-ஆம் தேதி முதல் 2025 அக்டோபேர் 06-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம், உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். நீங்கள் மேற்கொள்ளும் காரியங்கள் அனைத்தும் கைகூடும். சுயதொழில் செய்பவர்கள், ஆன்லைன் வியாபாரம் செய்பவர்கள் அனைவருக்கும் நல்ல வருமானம் உண்டு. உங்கள் பணப்புழக்கம் நன்றாக இருக்கும். வாழ்க்கையில் உங்கள் குறிக்கோள்களை அடைய திட்டமிடுங்கள். தகவல்தொடர்புகளை சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். யாரோடு பேச வேண்டும் என நினைக்கின்றீர்களோ, நேரடியாக நீங்களே பேசுங்கள். நீண்ட நாட்களாக விற்காத சொத்துக்கள் இந்த வாரம் விற்பனையாக வாய்ப்புள்ளது. கல்வியில் கவனம் தேவை. உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கலாம். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சேர்ந்து வியாபாரம் செய்தால், இருவருக்கும் லாபம் உண்டாகும். உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும் இருக்கும். பங்குச்சந்தை மற்றும் யூக வணிகங்களில் சாதாரண முதலீடுகள் செய்யலாம். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழ், அந்தஸ்து, வருமானம் கூடும். அரசியலில் இருப்பவர்களுக்கும் நல்ல வாய்ப்புகள் உண்டு. வேலைவாய்ப்பில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால், வேலை இல்லாமல் இருக்க மாட்டீர்கள். பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு எதிர்பார்த்தவர்கள் காத்திருக்க வேண்டும். இந்த வாரம் நீங்கள் துர்கை மற்றும் பெருமாளை வழிபடுவது நல்லது.

Tags:    

மேலும் செய்திகள்