வியாபாரத்தில் கவனம்

Update:2025-08-19 00:00 IST

2025 ஆகஸ்ட் 19-ஆம் தேதி முதல் 2025 ஆகஸ்ட் 25-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் உங்கள் ராசியை குரு பார்ப்பதால் இறைவனின் அருள் கிடைக்கும். திருமணம் தள்ளிப்போனவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் உண்டு. எதிர்பாராத பயணங்கள் ஏற்படும், ஆனால் அதில் ஒரு சிறிய தடைக்குப் பிறகு தொடரும். இந்த வாரம் நீங்கள் யாரையாவது நம்பி ஒரு காரியத்தைச் சாதிக்கலாம், அதற்கான கிரக நிலைகள் சாதகமாக உள்ளன. எனினும், மூன்றாம் இடத்தில் ராகு இருப்பதால், யாருடனும் நேரடி தொடர்பு கொள்வது நல்லது. இல்லையெனில் தேவையற்ற பிரச்சனைகள் வரலாம். ராசிக்கு எட்டில் சூரியன், புதன் இருப்பதால் நன்மையும், பிரச்சனைகளும் கலந்த பலன் உண்டு. வியாபாரத்தில் தொழில் தகராறு, நிச்சயமற்ற தன்மை இருக்கும். பங்குதாரர்களுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். உயர்கல்வியில் தடை ஏற்படும். பெரிய மனிதர்களின் தொடர்பு கிடைக்கும், ஆனால் அறிமுகத்தில் சில பிரச்சனைகள் வரலாம். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. தொழில், வேலை என எதிலும் திருப்தியின்மை இருக்கும். வேலை, விட்டுவிட்டு நடக்கும். வேலைவாய்ப்பில் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆனால் மேலதிகாரிகளின் ஆதரவு குறைவாக இருக்கும். சிவனையும், பெருமாளையும் வழிபடுவது நல்லது.

Tags:    

மேலும் செய்திகள்