சுறுசுறுப்பு அவசியம்
2025 ஆகஸ்ட் 12-ஆம் தேதி முதல் 2025 ஆகஸ்ட் 18-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உங்கள் லட்சியங்கள் நிறைவேறும். நிதி நிலைமை சீராக இருந்தாலும், செலவுகள் அதிகமாக இருக்கும். சோம்பேறித்தனத்தைத் தவிர்த்து சுறுசுறுப்பாக இருப்பது அவசியம். தகவல்தொடர்பு துறையில் இருப்பவர்களுக்கு இந்த வாரம் நல்ல வாய்ப்புகள் அமையும். எதிர்பார்த்த செய்திகள் சில தடைகளுக்குப் பிறகு வரும். நான்காம் இடத்தில் சனி வக்ர கதியில் இருப்பதால், உங்கள் உடல்நலம் மற்றும் தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் திருப்தியற்ற சூழ்நிலை இருக்கலாம், ஆனால் வேலைக்கு எந்த குறையும் இருக்காது. வியாபாரம் லாபகரமாக இருக்காது. கூட்டாளிகள் லாபம் ஈட்டுவார்கள், ஆனால் நீங்கள் போராட்டத்தைச் சந்திக்க நேரிடும். திருமண வாழ்வில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. உயர்கல்வி படிக்க விரும்புபவர்களுக்கு ஆகஸ்ட் 16-க்குப் பிறகு நல்ல பலன் உண்டு. தந்தையின் உடல்நலத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். அரசு சார்ந்த விஷயங்கள் மற்றும் மற்றவர்களின் விஷயங்களில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது. விளையாட்டு மற்றும் கலைத் துறையினருக்கு ஆகஸ்ட் 16-க்குப் பிறகு நல்ல முன்னேற்றம் உண்டு. மகாவிஷ்ணு மற்றும் சிவபெருமானை வழிபடுவது நன்மைகளைத் தரும்.