ஆரோக்கியத்தில் கவனம்

Update:2025-09-16 00:00 IST

2025 செப்டம்பர் 16-ஆம் தேதி முதல் 2025 செப்டம்பர் 22-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் உங்கள் ராசிநாதன் செவ்வாய் 11-ஆம் இடத்தில் சூரியனுடன் இருப்பதால், மூத்த சகோதரர்களாலும், ஆண் நண்பர்களாலும் நன்மை மற்றும் மகிழ்ச்சி உண்டாகும். பணவரவு நன்றாக இருக்கும். பேச்சின் மூலம் வருமானம் ஈட்டுபவர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். இருந்தும் உங்கள் ராசியில் ராகு குருவுடன் இந்த வாரம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்திலும், தாயாரின் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துங்கள். அதேபோல் வீடு, நிலம், வாகனம் போன்ற பெரிய முதலீடுகளை இந்த வாரம் செய்யாமல் இருப்பது நல்லது. கல்வியில் கவனம் செலுத்துங்கள். புதிய காதல் உறவுகள் உருவாக வாய்ப்புள்ளது. காதல் உறவில் இருப்பவர்களுக்கு அது திருமணத்தில் முடிய வாய்ப்புள்ளது. குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியும் பிரச்சனையும் கலந்திருக்கும். குழந்தைகள் உங்களைப் பிரிந்து இருக்க நேரிடலாம். வெளிநாட்டுத் தொடர்புகள் ஓரளவுக்கு நன்றாக இருக்கும். உங்கள் அந்தஸ்து மற்றும் புகழ் காப்பாற்றப்படும். அதேபோல் சொந்தத் தொழில் சிறப்பாக இருக்கும். ஆனால், கூட்டாளி தொழில் செய்தால், அவர் லாபம் அடைவார், நீங்கள் அவருக்காக உழைக்க நேரிடும். கலைத்துறையை சேர்ந்தவர்கள் கவனமாக இருங்கள் மற்றும் பங்குச்சந்தை முதலீடுகளை தள்ளி வைப்பது நல்லது. இந்த வாரம் நீங்கள் பிரம்மாவையும், பைரவரையும் வழிபடுவது நல்லது.

Tags:    

மேலும் செய்திகள்