எதிரிகளை வெல்வீர்கள்
2025 செப்டம்பர் 02-ஆம் தேதி முதல் 2025 செப்டம்பர் 8-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் எட்டாம் இடத்தில் சுக்கிரனும் குருவும் இருப்பதால் போராட்டங்கள் இருந்தாலும், வருமானம் கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த பென்ஷன், பிஎஃப், இன்சூரன்ஸ் பணம் போன்றவை எதிர்பாராத விதமாக வரும். இந்த வாரம் பெரிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். வழக்கமான வேலைகளை மட்டும் செய்யவும். வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும். பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உண்டு. செய்கின்ற வேலையை முழு மனதோடு செய்யுங்கள் நல்லது நடக்கும். லோன் அப்ளை செய்திருந்தால் கிடைக்கும். தேர்வு எழுதியவர்களுக்கு நல்ல முடிவு வரும். எதிரிகளை வெற்றி கொள்வீர்கள். ஆனால், வியாபாரம் சுமாராக இருக்கும். பெரிய முதலீடுகள் வேண்டாம். பார்ட்னர்ஷிப் வேண்டாம். புதிய காதல் உறவுகள் ஏற்படும். ஏற்கனவே காதலில் இருப்பவர்களுக்கு அவர்களின் காதல் திருமணத்தில் முடிய வாய்ப்புள்ளது. உயர்கல்வி, வேலை மாற்றம், இடம் மாற்றம், கம்பெனி மாற்றம் போன்றவற்றுக்கான வாய்ப்புகள் உண்டு. ராசிநாதன் செவ்வாய் 11-ம் இடத்தில் இருப்பதால் உங்கள் ஆசைகள் பூர்த்தியாகும். ஆண் நண்பர்களால் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டு. இந்த வாரம் மகாலட்சுமியையும் பைரவரையும் வழிபடுவது நல்லது.