உறவுகளால் நன்மை

Update:2025-08-12 00:00 IST

2025 ஆகஸ்ட் 12-ஆம் தேதி முதல் 2025 ஆகஸ்ட் 18-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் பணப்புழக்கம் நன்றாக இருக்கும். மற்றவர்களின் பணத்தை நீங்கள் கையாளும் சூழல் உருவாகும். வராத பணம் கைக்கு வரும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் ஓரளவு வெற்றியடையும். உறவுகளால் மகிழ்ச்சியும் நன்மையும் உண்டு. காதல் உறவுகளில் வெற்றி கிடைக்கும். பிரேக்கப் ஆனவர்கள் மீண்டும் சேர்வதற்கான வாய்ப்புகளும் அதிகம். குழந்தை பாக்கியம் எதிர்பார்த்து இருப்பவர்களுக்குச் சில போராட்டங்கள் இருக்கும். குழந்தைகளால் மன வருத்தங்களும், பிரிவுகளும் ஏற்படலாம். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு, போனஸ் போன்றவற்றிற்கான வாய்ப்புகள் இந்த வாரம் அதிகம். வியாபாரம் சுமாராக இருக்கும். கூட்டாளிகள் மூலம் லாபம் கிடைக்கும். உங்கள் கௌரவமும் அந்தஸ்தும் அதிகரிக்கும். அரசு சார்ந்த காரியங்கள் ஆகஸ்ட் 16-க்குப் பிறகு வெற்றிகரமாக முடியும். உங்கள் நண்பர்களால் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் முன்னேற்றமும் உண்டு. பிரம்மா மற்றும் மகாலட்சுமியை வழிபடுவது சிறந்தது.

Tags:    

மேலும் செய்திகள்