எதிரிகளை வெல்வீர்கள்
2025 ஆகஸ்ட் 26-ஆம் தேதி முதல் 2025 செப்டம்பர் 1-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் உங்கள் ராசிநாதன் செவ்வாய் லாப ஸ்தானத்தில் இருப்பதால், உங்கள் நட்பு வட்டம் அதிகரிக்கும். குறிப்பாக ஆண் நண்பர்களால் உங்களுக்கு நன்மைகள் உண்டு. நிதி நிலைமை நன்றாக இருக்கும், கையில் பணம் புழங்கும். குழந்தைகள் மற்றும் மனைவியால் சில பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். புதிய காதல் உறவுகள் உருவாகும். ஏற்கனவே காதல் உறவில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சி மற்றும் வெற்றி கிடைக்கும். சோம்பேறித்தனத்தை தவிர்த்து முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். உயர்கல்வி நன்றாக இருக்கும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்பவர்களுக்கு நிலுவையில் உள்ள பணம் வந்து சேரும். உங்கள் கௌரவம் மற்றும் அந்தஸ்து காப்பாற்றப்படும். பங்குச்சந்தை, லாட்டரி போன்றவற்றில் முதலீடு செய்வதை தவிர்க்கவும். விட்டதை பிடிக்க ஆசைப்படாதீர்கள். வேலைவாய்ப்புகள் பரவாயில்லை. கடன் வாங்க நேர்ந்தால், அவசியமானால் மட்டும் கடன் வாங்குங்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். எதிரிகளை வெல்வீர்கள், ஆனால் சில பிரச்சனைகளும் வரலாம். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழ் கிடைக்கும். ஆனால் வருமானம் சுமாராகவே இருக்கும். இந்த வாரம் பிரம்மாவையும் மகாலட்சுமியையும் வழிபடுங்கள்.