செலவுகள் அதிகரிக்கும்

Update:2025-09-30 00:00 IST

2025 செப்டம்பர் 30-ஆம் தேதி முதல் 2025 அக்டோபேர் 06-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம், வசதி உள்ளார்கள் முதலீடு செய்யுங்கள். குறிப்பாக வெளியூர் அல்லது வெளிநாட்டில் முதலீடு செய்ய நல்ல வாய்ப்புகள் உண்டு. அப்படி செய்ய தவறினால் தேவையில்லாத செலவுகள், நஷ்டம், விரயம், மருத்துவச் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக, சகோதர, சகோதரிகள் அல்லது பயணத்தினால் செலவுகள் உண்டாகும். வருமானம் இருந்தாலும், அதற்கு மேல் செலவுகளும் அதிகரிக்கும். கல்வி சுமாராக இருந்தாலும், படிப்பில் கவனமாக இருக்க வேண்டும். உற்பத்தி சார்ந்த துறையில் இருப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேலைவாய்ப்பில் கவனம் தேவை. நீங்கள் கடுமையாக உழைத்தாலும், அதன் பலன் மற்றவர்களுக்குச் செல்ல வாய்ப்புள்ளது. இந்த வாரம் நீங்கள் சிவன் மற்றும் முருகப்பெருமானை வழிபடவும்.

Tags:    

மேலும் செய்திகள்