ஆரோக்கியத்தில் கவனம்

Update:2025-09-23 00:00 IST

2025 செப்டம்பர் 23-ஆம் தேதி முதல் 2025 செப்டம்பர் 29-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. பணம் இருப்பவர்கள் நிலம், தோட்டம் போன்றவற்றை வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். இல்லையெனில் தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். மேலும் கடன் வாங்கி அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களை வாங்கலாம். தாயார் மற்றும் உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இந்த வாரம் வருமானம் நன்றாக இருந்தாலும் செலவுகளும் அதிகம் இருக்கும். பிள்ளைகள் மற்றும் சகோதரர்களுக்காக செலவு செய்ய நேரிடும்.வேலைவாய்ப்பை பொறுத்தவரை வேலை இல்லை என்கிற சூழல் இல்லை, ஏதேனும் ஒரு வேலை கிடைக்கும். ஆனால், சனி பகவான் 5-ம் இடத்தில் இருப்பதால், வேலையை விட்டு வெளியேறும் சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. காதல் உறவில் இருப்பவர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கிறது. பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேர்வார்கள். குழந்தைகளால் மனவருத்தங்கள் ஏற்படலாம். உங்களுக்காகவும், குழந்தைகளுக்காகவும் செலவு செய்ய வேண்டியிருக்கும். தொழில் ரீதியாக, நல்ல முன்னேற்றம் மற்றும் எதிர்காலத்தில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் அதிகம். இந்த வாரம் நீங்கள் முருகனையும், சிவன் கோவிலில் உள்ள பிரம்மாவையும் வழிபடுவது சிறந்தது.

Tags:    

மேலும் செய்திகள்