சிறந்த திருமண அலங்கார யோசனைகள் - இந்த வாரம் இந்து வெட்டிங் மேக்-அப் லுக்!

இந்து முறைப்படி செய்யப்படும் திருமணங்களில், பெரும்பாலும் மணமகள்களுக்கு பட்டுப்புடவை, தங்க ஆபரணங்கள் என அலங்காரம் செய்யப்படுவது வழக்கம்.

Update: 2024-05-20 18:30 GMT
Click the Play button to listen to article

மும்மதங்களின் திருமண வைபவத்தில் மணப்பெண்களுக்கு செய்யப்படும் அலங்காரத்தில், கடந்த வாரம் கிறிஸ்டியன் வெட்டிங் லுக் குறித்து பார்த்தோம். இந்த வாரம் ட்ரெடிஷனல் இந்து வெட்டிங் மேக்-அப் லுக் பார்க்க இருக்கிறோம். இந்து முறைப்படி செய்யப்படும் திருமணங்களில், பெரும்பாலும் மணமகள்களுக்கு பட்டுப்புடவை, தங்க ஆபரணங்கள் என அலங்காரம் செய்யப்படுவது வழக்கம். அதிலும் திருமணத்திற்காக எடுக்கப்படும் பட்டுப்புடவை ரொம்ப ஸ்பெஷல். புடவையின் நிறம், வடிவங்கள், விலை என பார்த்து பார்த்து மணமகள்கள் வாங்குவார்கள். யாரடி நீ மோகினி படத்தில் தனுஷ் சொல்வதுபோல red-ங்க ரெட் தான் அழகா இருக்கும், சிவப்பு நிற புடவைகளையே இந்து வெட்டிங்கில் அதிகம் பயன்படுத்துவார்கள். இன்றைய கால வளர்ச்சியின் அடிப்படையில் மணமக்களின் பெயர், திருமண தேதி, வருடம், முக்கியமான நினைவுகள் உள்ளிட்டவை மணமகளின் புடவை முந்தானையில் போடப்படுவது தனிச்சிறப்பாகிவிட்டது. வாழ்வில் திருமணம் என்பது மிகவும் முக்கியமானது. அப்படி சிறப்பு வாய்ந்த இந்த தருணத்தில், பார்க்க நேர்த்தியாக இருக்கும் மேக்-அப் எப்படி செய்யலாம் என சொல்லிக்கொடுத்து விளக்குகிறார் அழகு கலை நிபுணர் லலிதா.

செயல்முறை:

* சமீபத்திய மேக்-அப்களில் லென்ஸ் வைப்பது ஒரு கட்டாயமாகிவிட்டது. மேக்-அப் போடுவதற்கு முன்னரே லென்ஸ் வைப்பதால் கண் கலங்கி மேக்-அப் அழியாமல் இருக்க உதவும்.

* மேக்-அப் போடுவதற்கு முன்பு முக்கியமாக முகத்தை நன்கு கழுவ வேண்டும். இரண்டாவது டோனர் போட வேண்டும். மூன்றாவது முக்கியமானது மாய்ச்சுரைசர், வறண்ட சருமத்திற்கு உயிரூட்டும் விதமாக சரியான மாய்ச்சுரைசரை முகத்தில் அப்ளை செய்ய வேண்டும்.

* பிரைமர் வைத்து தேவையான இடங்களில் டேப் செய்ய வேண்டும்.


புருவங்கள் வரையும் காட்சி

* அடுத்ததாக புருவங்கள் சரியான வடிவத்தில் இருக்க அவுட்லைன் போட்டு உள் பகுதியில் இருக்கும் இடைவெளிகளை நிரப்ப வேண்டும்.

* கன்சீலர் வைத்து தேவையான இடங்களில் அதாவது மேல் நெற்றி, தாடை, மூக்கு, கன்னங்களில் பிரஷ் வைத்து டேப் செய்ய வேண்டும். சிறிது லூஸ் பவுடர் வைத்து செட் செய்ய வேண்டும்.

* ஐ-ஷேடோ வைத்து அவுட்லைன் போட வேண்டும். பின்னர் கண்களில் கருமை இருந்தால் கன்சீலர் வைத்து டேப் செய்த பிறகு ஐ-ஷேடோ வைத்தால் பார்ப்பதற்கு இன்னும் அழகாக இருக்கும்.


லூஸ் பவுடர் வைத்து ஃபவுண்டேஷன் மற்றும் கண்டோரை செட் செய்யும் காட்சி

* அடுத்ததாக ஜெல் தன்மையில் இருக்கும் ஐ-லைனர் போட வேண்டும். இதை பயன்படுத்தி காஜல் கூட போட்டுக்கொள்ளலாம். ஐ-ஷேடோவை கண்களின் கீழ் பகுதியில் போட வேண்டும். பின்னர் ஐ-லாஷ் வைத்தால் ஐ மேக்-அப் முடிந்தது.


ஃபவுண்டேஷனை முகம் முழுவதும் அப்ளை செய்யும் காட்சி

* அடுத்ததாக ஃபவுண்டேஷனை முகம் முழுவதும் அப்ளை செய்ய வேண்டும். பிறகு கண்டோர் செய்து, லூஸ் பவுடர் வைத்து ஃபவுண்டேஷன் மற்றும் கண்டோரை செட் செய்ய வேண்டும். ப்ரான்ஸை, மூக்கு மற்றும் கன்னத்தில் அப்ளை செய்ய முகம் நேர்த்தியாக இருக்கும்.


மேக்-அப் முழுமையாக முடிந்த மணப்பெண் அலங்காரம்

* லிப்ஸ்டிக் போடுவதற்கு முன்னாள் லிப் மாய்ச்சுரைசர் போட வேண்டும். உடையின் நிறத்திற்கு பொருத்தமான லிப்ஸ்டிக் கலரை தேர்வு செய்து போட வேண்டும். இறுதியாக செட்டிங் ஸ்பிரே அடித்தால் ட்ரெடிஷனல் இந்து வெட்டிங் மேக்-அப் லுக் முடிந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்