நடிகர் சிவகுமார் என்னை காதலித்தாரா! - நடிகை ஜெயசித்ரா
நான் சிவகுமாரை காதலிப்பதாக சில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. ஒரு தொழில் அதிபரை நான் மணந்து கொள்ளப் போகிறேன் என்றுகூட ஒரு பத்திரிகையில் செய்தி வந்தது.;
(30-06-1974 தேதியிட்ட ராணி இதழில் வெளியானது)
"சொந்தங்கள் வாழ்க!” என்ற படத்தில் ஜெயசித்ரா நடித்துக் கொண்டு இருந்தார். அப்பொழுது அவரை "ராணி" நிருபர் சந்தித்தார். "சிவகுமாருக்குத் திருமணம் நிச்சயம் ஆகியிருக்கிறது போலிருக்கிறதே?" என்று நிருபர் சொன்னர். ஆமாம், பத்திரிகையில் பார்த்தேன். பெண்ணின் படம்கூட வந்திருந்ததே" என்று ஜெயசித்ரா சிரித்தார்.
சிவகுமாருடன் காதல்
நிருபர்: நீங்களும், சிவகுமாரும் காதலிப்பதாகக்கூட பத்திரிகைகளில் செய்தி வெளிவந்ததே?
ஜெயசித்ரா: நான் சிவகுமாரை காதலிப்பதாக சில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. ஒரு தொழில் அதிபரை நான் மணந்து கொள்ளப் போகிறேன் என்றுகூட ஒரு பத்திரிகையில் செய்தி வந்தது. பாவம், அவர்கள் திரைப்படங்களில் என்னைப் பார்த்து விட்டு, இப்படி கயிறு திரிக்கிறார்கள். ஆனால், உண்மை என்ன தெரியுமா?
'புவனா ஒரு கேள்விக்குறி' படத்தில் சிவகுமாருடன் ஜெயசித்ரா
நான் சிறு பெண்
நிருபர்: சொல்லுங்கள்.
ஜெயசித்ரா: நான் சிறு பெண்! காதலிக்கவோ, கல்யாணம் செய்து கொள்ளவோ எனக்கு இன்னும் வயது ஆகவில்லை! காதல் என்றாலே என்ன என்று எனக்குத் தெரியாது ! படத்தில் பார்த்தால், நான் பெரிய பெண் போலத் தெரிவேன். ஏனென்றால், படங்களில் நான் சேலை கட்டிக் கொள்ளுகிறேன். ஆனால், வீட்டில் இருக்கும்பொழுது நான் சேலை கட்டிக் கொள்ளுவது இல்லை. வெறும் பாவாடை தாவணிதான். அவ்வளவு சிறு பெண் நான்!
நிருபர்: சிவகுமார் உங்களை காதலித்தாரா? இல்லையா?
ஜெயசித்ரா: அது எப்படி எனக்குத் தெரியும்! அவர் மனதில் உள்ளதை அறிய எனக்கு மந்திரம் தெரியாது. அதோடு காதல் என்றாலே என்ன என்று எனக்குத் தெரியாது !
நிருபர்: நெருப்பு இல்லாமல் புகையுமா?
நடிகர் சிவகுமாருடன் ஜெயசித்ரா எடுத்துக்கொண்ட புகைப்படம்
ஜெயசித்ரா: நானும், சிவகுமாரும் பல படங்களில் சேர்ந்து நடிக்கிறோம். தொழில் முறையில் நாங்கள் நண்பர்கள். சேர்ந்து பழக நிறைய வாய்ப்பு இருக்கிறது. அதனால் இப்படி கதை கட்டுகிறார்கள்.
நிருபர்: சிவகுமார் திருமணம் செய்து கொள்ளப் போவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ஜெயசித்ரா: புதுமாப்பிள்ளைக்கு எனது வாழ்த்துகள்! இனிமேலாவது என்னைப்பற்றிய வதந்திகள் குறையும் என்று எதிர்பார்க்கிறேன்!
நான் கர்வம் பிடித்தவள்?
நிருபர்: நீங்கள் கர்வம் பிடித்தவர் என்று சாவித்திரி குற்றஞ்சாட்டியிருக்கிறாரே!
அம்மன் வேடத்தில் ஜெயசித்ரா மற்றும் சாவித்திரி