சன்னி லியோனுக்கே டஃப்! உச்சகட்ட கவர்ச்சிக்கு ஓகே சொன்ன தமன்னா!

தமிழ்த் திரையுலகில் தனது அழகாலும், நடிப்பாலும் பல ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை தமன்னா.;

Update:2025-09-02 00:00 IST
Click the Play button to listen to article

தமிழ்த் திரையுலகில் தனது அழகாலும், நடிப்பாலும் பல ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை தமன்னா. கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் பிரகாசித்து வரும் இவர், ‘பாகுபலி’ போன்ற பிரம்மாண்டமான படங்களிலும் நடித்து இந்திய அளவில் கவனம் பெற்றவர் ஆவார். இருப்பினும் துவக்கத்தில் அழகு நடிகையாக கொஞ்சம் கிளாமரோடு, குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்த தமன்னா, சமீபகாலமாக உச்சபட்ச கவர்ச்சி பாத்திரங்களை ஏற்று நடித்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். அந்த வகையில், சன்னி லியோன் நடித்த 'ராகினி எம்எம்எஸ்' படத்தின் மூன்றாம் பாகமான 'ராகினி எம்எம்எஸ் 3' படத்தில் தமன்னா நடிக்கவிருப்பதாக வெளியான தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமன்னாவின் இந்த புதிய கவர்ச்சி பயணம் குறித்த விரிவான தகவலை இந்த தொகுப்பில் காணலாம்.

அழகு பதுமையாக

நடிகை தமன்னா பாட்டியா தனது திரைப்பயணத்தை 2006-ஆம் ஆண்டு வெளியான 'கேடி' திரைப்படம் மூலம் தொடங்கினார். ரவி கிருஷ்ணா மற்றும் இலியானாவுடன் இணைந்து நடித்த இந்தப் படத்தில், அவரது வசீகரமான தோற்றமும், துடிப்பான நடிப்புத் திறனும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. இப்படம் வணிக ரீதியாக பெரிய வெற்றி பெறாவிட்டாலும், தமன்னாவின் வருகை தமிழ்த் திரையுலகில் புதிய நட்சத்திரத்திற்கான வாய்ப்பை உணர்த்தியது. இதைத் தொடர்ந்து, இயக்குநர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் 2007-ஆம் ஆண்டு வெளியான 'கல்லூரி' திரைப்படம் அவரது திரைவாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இந்தப் படத்தில், அமைதியான மாணவியாக ஷோபனா என்ற கதாபாத்திரத்தில் எந்தவித ஒப்பனையும் இல்லாமல் வந்து, அவர் வெளிப்படுத்திய யதார்த்தமான நடிப்பு பரவலான பாராட்டுகளைப் பெற்றது. இது, அவரை வெறும் அழகி என்ற அடையாளத்திலிருந்து விலக்கி, திறமையான நடிகை என்ற நிலைக்கு உயர்த்தியது.


'கல்லூரி' மற்றும் விஜய்யின் 'சுறா' திரைப்படத்தில் தமன்னா 

'கல்லூரி' திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, தமன்னா தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப் படங்களில் நடித்தார். அதில் 2009-ஆம் ஆண்டு சூர்யாவுடன் நடித்த 'அயன்' திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்தது. இது அவரை முன்னணி கதாநாயகிகளில் ஒருவராகவும் நிலைநிறுத்தியது. பின்னர் அதே ஆண்டில் தனுஷ் உடன் நடித்த 'படிக்காதவன்' படத்திலும் அவரது நடிப்பு கவனம் பெற்றது. தொடர்ந்து 2010-ஆம் ஆண்டில் கார்த்தியுடன் அவர் இணைந்து நடித்த 'பையா' திரைப்படம் அவருக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது. குறிப்பாக இப்படத்தில் காதல் காட்சிகள் மற்றும் பாடல்களில் அவர் வெளிப்படுத்திய நடிப்பு வெகுவாக ரசிக்கப்பட்டது. இதன் பின்னர், விஜய்யுடன் 'சுறா', அஜித்துடன் 'வீரம்', விஜய் சேதுபதியுடன் 'தர்மதுரை' என நடித்த தமன்னா கோலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வந்ததோடு, இந்த காலகட்டத்தில் கவர்ச்சியான கதாபாத்திரங்கள் மட்டுமின்றி, குடும்பப்பாங்கு நிறைந்த கதாபாத்திரங்களிலும் சிறப்பாக நடித்து தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தினார்.

கிளாமர் குயினாக

ஒரு கட்டத்தில் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற பல மொழிகளிலும் நடித்து, ஒரு பான்-இந்தியா நட்சத்திரமாக மாறினார் தமன்னா. குறிப்பாக பிரம்மாண்ட இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான 'பாகுபலி' திரைப்படம், இந்திய அளவில் அவருக்குப் பெரும் புகழை பெற்றுத் தந்தது. இந்தப் படத்தில் அவர் ஏற்று நடித்த அவந்திகா என்ற வீராங்கனை கதாபாத்திரம், இந்தியத் திரையுலகில் அவரை ஒரு தனித்துவமான நடிகையாக நிலைநிறுத்தியது. இதேநேரம் தமிழிலும் 'தேவி' போன்ற வித்யாசமான படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வந்த தமன்னா கொஞ்சம் கொஞ்சமாக கிளாமரில் இருந்து கவர்ச்சி புயலாக மாற துவங்கினார். குறிப்பாக 'பையா' படத்தில் வரும் 'அடடா மழைடா ' மற்றும் 'அயன்' படத்தில் வரும் 'நெஞ்சே நெஞ்சே நீ எங்கே’' போன்ற பல பாடல்களில் அவர் வெளிப்படுத்திய மென்மையான மற்றும் கவர்ச்சியான நடன அசைவுகள் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டன. இந்தப் படங்கள் தமன்னாவை ஒரு 'கிளாமர் குயின்' ஆக நிலைநிறுத்தின. ஆனால், அது ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் இருந்தது.


'பையா' மற்றும் 'அரண்மனை 4' படங்களின் பாடல் காட்சிகளில்... 

சமீபகாலமாக, நடிகை தமன்னாவின் திரைப்பயணம் ஒரு புதிய திசையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. இது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கும் வகையில் உள்ளது. அவர், தனது முந்தைய படங்களை விட, மேலும் துணிச்சலான மற்றும் கவர்ச்சியான கதாபாத்திரங்களை தைரியமாகத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். 'கவர்ச்சி' என்பது ஒரு நடிகையின் தனிப்பட்ட உரிமை என்றாலும் அதற்கும் ஒரு எல்லை உண்டு. முன்பு பாலிவுட்டில் மட்டுமே அதிக கவர்ச்சி காட்டிய தமன்னா, தற்போது தென்னிந்திய திரைப்படங்களிலும் அதனை தொடர்ந்து வருகிறார் . 'ஜெயிலர்' படத்தில் வெளியான 'காவாலா' பாடல் இதற்கு ஒரு சிறந்த உதாரணம். இந்தப் பாடலில் அவரது கவர்ச்சியான நடனம் சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதேபோல், 'அரண்மனை 4' படத்தில், ஒரு அன்பான தாயாக அவர் நடித்திருந்தாலும், படத்தின் இறுதிக்காட்சியில் இடம்பெற்ற அவரது கவர்ச்சியான நடனம் மற்றும் தோற்றம் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இது தமன்னாவின் திரையுலக இருப்புக்கு ஒரு வகையில் உதவினாலும், அவரது நடிப்புத் திறனை முழுமையாக வெளிப்படுத்தும் கதாபாத்திரங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகளை குறைத்து விட்டது என்றும் சொல்லலாம்.

உச்சபட்ச கவர்ச்சியில்

தமன்னாவின் இந்த கவர்ச்சி பயணம், முதலில் பாலிவுட்டில்தான் துவங்கியது. இந்தி சினிமாவில் கிளாமருக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு உண்டு. அந்த வகையில் தமன்னா, தென்னிந்திய படங்களில் சற்று தயங்கிய கவர்ச்சி எல்லைகளை, பாலிவுட்டில் பத்து ஆண்டுகளுக்கு முன்னரே கடக்க தொடங்கினார். அதில் குறிப்பாக 2013 ஆம் ஆண்டு நடிகர் அஜய் தேவ்கனுடன் பாலிவுட்டில் இவர் இணைந்து நடித்த 'ஹிம்மத்வாலா' போன்ற படங்களில் மிகவும் தாராளமாக கவர்ச்சி காட்டியது இந்தி ரசிகர்களிடையே அவரைப் பிரபலப்படுத்தியது. இந்தப் படங்களில் அவரது துணிச்சலான காட்சிகள், பாடல் காட்சிகளில் அவரது வசீகரிக்கும் நடனம் போன்றவை அவரைப் பாலிவுட்டில் ஒரு கவர்ச்சி நாயகியாக அடையாளப்படுத்தியது. இந்தக் கவர்ச்சி அணுகுமுறை தமன்னாவுக்கு பாலிவுட்டில் ஒரு தனி இடத்தைப் பெற்று தந்தது. மேலும், இத்தகைய பாத்திரங்கள் மற்றும் துணிச்சலான கவர்ச்சி காட்சிகள் மூலம் பாலிவுட் ரசிகர்களை ஈர்த்தது மட்டுமல்லாமல், தென்னிந்திய படங்களிலும் அவரது பிம்பம் மெல்ல மெல்ல மாறத் தொடங்கியது. இதன் விளைவாக, தென்னிந்திய படங்களிலும் அவர் கூடுதல் கவர்ச்சியுடன் நடிக்கத் தொடங்கினார்.


'ஹிம்மத்வாலா' மற்றும் 'லஸ்ட் ஸ்டோரிஸ் 2' சீரிஸில் தமன்னா

இதில் உச்சபட்சமாக நடிகை தமன்னாவின் திரை வாழ்வில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது, 2023-ஆம் ஆண்டு வெளியான ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2’ என்ற ஆந்தாலஜி வெப் தொடர். இதில், அவர் தனது முன்னாள் காதலரான நடிகர் விஜய் வர்மாவுடன் இணைந்து நடித்தார். இந்த தொடரில், தமன்னா நடித்த சில துணிச்சலான மற்றும் நெருக்கமான படுக்கையறைக் காட்சிகள், அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தின. பல ஆண்டுகளாக தென்னிந்தியாவில் ஒரு அழகான, குடும்பப்பாங்கான நடிகையாக அறியப்பட்ட தமன்னா, இதுபோன்ற ஒரு துணிச்சலான கதாபாத்திரத்தில் நடித்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. இந்த வெப் தொடரில் அவர் மேற்கொண்ட துணிச்சலான நடிப்பு, தனது சினிமா இமேஜை பற்றி கவலைப்படாமல் கதைக்கு தேவைப்பட்டால் எந்த எல்லைக்கும் செல்லத் தயார் என்பதை வெளிப்படுத்தியது. இருப்பினும் துவக்கத்திலிருந்தே அவர் மீது அன்பு காட்டி வந்த சில ரசிகர்களுக்கு இது அதிருப்தியை அளித்தது.

சன்னி லியோனுக்கே டஃப்

சினிமா வட்டாரங்களில் பரவி வரும் தகவல்களின்படி, தற்போது தமன்னா தனது அடுத்த பெரிய கவர்ச்சி பாய்ச்சலுக்குத் தயாராகி வருகிறார். 2011ஆம் ஆண்டு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 'ராகினி எம்எம்எஸ்' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் 2014-ல் வெளியானது. வினய் யெங்கண்டகுலா இயக்கிய அப்படத்தில் சன்னி லியோன் கதாநாயகியாக நடித்திருந்தார். தற்போது, 'ராகினி எம்எம்எஸ்' திரைப்படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா நடிக்கவிருப்பதாக அப்படத்தின் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் உறுதிப்படுத்தியுள்ளார். இது ஒரு ஹாரர் த்ரில்லர் திரைப்படமாக உருவாகவிருக்கிறது. தமன்னாவின் கவர்ச்சியும், நடிப்புத் திறனும் இப்படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'ராகினி எம்எம்எஸ்' திரைப்படத்தின் முந்தைய பாகங்கள் ஹாரர் மற்றும் கவர்ச்சி கலந்த கதையால் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. மூன்றாம் பாகத்தில் தமன்னா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


சன்னி லியோனுக்கே டஃப் கொடுக்க வரும் நடிகை தமன்னா

மேலும் இதற்கு முன்பு வெளியான 'ராகினி எம்எம்எஸ் 2' படத்தில், பாலிவுட்டின் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் ஒரு கவர்ச்சி பாடலுக்கு நடனமாடி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை வெகுவாக அதிகரித்தார். தற்போது அந்த வரிசையில் நடிகை தமன்னா இணைந்திருப்பது, 'ராகினி எம்எம்எஸ்' தொடரின் மூன்றாவது பாகத்தின் மீதான ஆர்வத்தை மேலும் தூண்டியுள்ளது. பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கும் தகவலின்படி, இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டின் இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'லஸ்ட் ஸ்டோரீஸ் 2' தொடரில் தமன்னா காட்டிய துணிச்சலான நடிப்பு, 'ராகினி எம்எம்எஸ் 3' படத்திலும் எதிரொலிக்குமா என்ற கேள்வி தற்போது ரசிகர்களிடையே எழுந்துள்ளது. அவர் சன்னி லியோனை மிஞ்சும் வகையில் கவர்ச்சி வேடத்தில் நடிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்