கோடைகால முடி பராமரிப்பு! தலை முடிக்கு ஏன் சீரம் தடவ வேண்டும்?

Update:2025-05-13 00:00 IST
Click the Play button to listen to article

தலைமுடி என்று எடுத்துக்கொண்டால், சிலருக்கு எண்ணெய் பசை அதிகமாக இருக்கும். சிலருக்கு கூந்தல் மிகவும் ட்ரையாக இருக்கும். சிலருக்கு கூந்தலில் ஆங்காங்கே வெடிப்பு இருக்கும். எனவே கூந்தல் பராமரிப்பு என்பது பெண்களுக்கு பெரும் சவாலான விஷயமே. இந்நிலையில், ராணி ஆன்லைனின் ப்யூட்டி பகுதியில், இந்த வாரம் முடி பராமரிப்பு குறித்து விளக்குகிறார் அழகு கலை நிபுணர் பிரியதர்ஷ்னி. தலைக்கு சீரம் அவசியமா? ஹேர் ட்ரையரை எப்படி பயன்படுத்த வேண்டும்? கோடை காலத்தில் வாரத்திற்கு எத்தனை முறை தலைக்கு குளிக்க வேண்டும்? உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்களுக்கு அவர் பதில் அளித்துள்ளார்.   


தலைமுடிக்கு சீரம் தடுவுவதற்கு முன்

நிறையே பேர் தலைக்கு குளிப்பதை முறைப்படி செய்வது இல்லை. தலைக்கு குளிப்பதில் நிறைய டெக்னிக் இருக்கிறது. நாம் வழக்கமாக தலைக்கு குளிக்கும்போது கன்டிஷனிங் செய்வது நல்லது. கன்டிஷனிங் செய்யும்போது தலைமுடி ட்ரை ஆகாமல் இருக்கும். அதையும் தாண்டி ட்ரையாக இருந்தால் சீரம் பயன்படுத்தலாம். நிறைய பேருக்கு சீரம் பயன்படுத்துவது ஏன் என்று தெரியாது. சீரம் பயன்படுத்துவதால், முடி வளருமா? முடி கொட்டுவது கட்டுப்படுமா? என்றெல்லாம் நிறைய கேள்விகள் இருக்கும். சீரமை பொறுத்தவரை முடி கொட்டுவதை எல்லாம் கண்ட்ரோல் செய்யாது. சிலருக்கு தலைக்கு குளித்தவுடன், முடி அடங்காமல் பயங்கர ட்ரையாக இருக்கும். அப்போது முடிக்கு சீரமை தடவினால், முடி சற்று கட்டுப்படும். 

தலைமுடிக்கு சீரம் அப்ளை செய்வது எப்படி?

கையில் கொஞ்சமாக சீரமை எடுத்துக்கொண்டு, நன்றாக தேய்த்து, தலைமுடியில் அப்ளை செய்ய வேண்டும். சீரம் தடவியவுடன்,.முடியின் ட்ரைனஸ் கன்ட்ரோல் ஆகி, முடி லுக்காகவும் ஷைனிங்காகவும் காட்சியளிக்கும். தலைக்கு குளித்துவிட்டு முடி ட்ரையாக இருந்ததற்கும், சீரம் தடவிய பிறகும் நன்கு வித்தியாசம் தெரியும். முடி நன்கு கையில் கட்டுக்குள் வந்திருக்கும். 


தலைமுடியை இரண்டாக பிரித்து செக்‌ஷன் கிளிப் போட்டு ட்ரையர் போடுதல்

ட்ரையரை பயன்படுத்துவது எப்படி?

அடுத்து, வீட்டில் ட்ரையர் வைத்திருப்பவர்கள், அதனை எப்படி பயன்படுத்த வேண்டும்? ப்ளோ ட்ரை செய்வது எப்படி? என்று பார்ப்போம். உங்களிடம் செக்‌ஷன் கிளிப் இருந்தால், முடியை இரண்டு பகுதியாக பிரித்து போட்டுக்கொள்ளுங்கள். ட்ரையரை பயன்படுத்தும்போது அதிக ஹீட் வைக்கத் தேவையில்லை. ஹீட் அளவை குறைவாக வைத்து பயன்படுத்துவதே நல்லது. அத்துடன் ஏற்கனவே முடிக்கு சீரம் தடவி இருப்பதால், முடிக்கு வெப்ப பாதுகாப்பு கிடைத்துவிடும். எனவே தனியாக ஹீட் ப்ரொட்டக்‌ஷன் கேர் வாங்க தேவையில்லை. அதற்கு பதிலாக சீரத்தையே பயன்படுத்திக்கொள்ளலாம்.

ட்ரையரில், ஃப்ளாட் ப்ரஷ் எடுத்துக்கொண்டு, குறைந்த வெப்பத்தை செட் செய்து மேலிருந்து கீழாக ஃப்ளாட் ட்ரை செய்யலாம். தலைக்கு குளித்துவிட்டு நாம் உடனடியாக வெளியே எங்காவது கிளம்புகிறோம் என்றால், இதுபோன்று சீரம் தடவிவிட்டு, ஃப்ளாட் ட்ரை செய்தால், முடிக்கு ஸ்ட்ரெய்ட் லுக் கிடைக்கும். பார்லர் போக நேரமில்லாத சமயங்களில் நம் வீட்டில் உள்ள ட்ரையரை பயன்படுத்தி நாம் இவ்வாறு செய்துகொள்ளலாம். ஹேர் ஸ்ட்ரெய்ட்னிங் செய்தால் முடி கொட்டிவிடுமோ என்று அச்சப்படுகிறவர்கள், இதுபோன்று செய்து கொண்டால், பார்க்கவும் அழகாக இருக்கும், முடியும் கொட்டாது. அடுத்த ஹேர் வாஷ் வரை முடி அப்படியே இருக்கும். 


முடிக்கு சீரம் தடவி ட்ரையர் போட்டு ஸ்ட்ரெய்ட்னிங் செய்த பிறகு அழகான லுக்கில்

கோடை கால முடி பராமரிப்பு 

சிலர் வாரத்திற்கு ஒருமுறை தலைக்கு குளிப்பதை வாடிக்கையாக வைத்திருப்பார்கள். ஆனால் கோடையில் தலையில் அதிகம் வியர்க்கும். அதனால் முடி உதிர்வும் அதிகரிக்கும். எனவே வெயில் காலத்தில் வாரத்திற்கு 3 முறை தலைக்கு குளிக்க வேண்டும். அதுவும் தலைக்கு குளிப்பதற்கு முந்தைய நாள் இரவு தலையில் எண்ணெய் வைத்துவிட்டு, காலையில் ஹேர் வாஷ் செய்துவிடலாம். இதுவே சைனஸ் போன்ற பிரச்சனை உள்ளவர்கள், காலையில் எழுந்தவுடன் தலைக்கு எண்ணெய் வைத்து, சில மணி நேரத்திற்கு பின் குளித்துவிடலாம். 

சிலர், நான் தினமும் தலைக்கு எண்ணெய் வைக்கிறேன். ஆனாலும் முடி கொட்டுகிறதே என்று கேட்பார்கள். இதற்கு காரணம், தற்போது எல்லா இடங்களிலும் காற்று மாசு அதிகரித்துள்ளது. அப்படியிருக்கையில் தலைக்கு எண்ணெய் வைத்துக்கொண்டு வெளியே செல்லும்போது, அது மாசுவை எளிதாக ஈர்த்துக்கொள்கிறது. இதனால் தலையில் பொடுகு தொல்லை ஏற்பட்டு முடியும் கொட்டும். பொடுகு தொல்லைக்கு மற்றொரு காரணமாக இருப்பது புரோட்டீன் குறைபாடு. எனவே உணவில் சரியான அளவில் புரோட்டீன் எடுத்துக்கொள்ள வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்