திருமணம் நடக்குமா? ட்விஸ்டு கொடுத்த விஷால்... ரசிகர்கள் அதிர்ச்சி!

கடந்த வாரம் முழுவதும் உலக சினிமா முதல் தமிழ் சினிமா வரை நடந்த சுவாரஸ்ய தகவல்கள் சிலவற்றை சினி பைட்ஸ் பகுதியில் காண்போம்.;

Update:2025-07-22 00:00 IST
Click the Play button to listen to article

நீண்ட காலமாக எப்போது வருவார், எப்போது வருவார் என காத்திருந்த தனது ரசிகர்களிடம், உடல் நலக்குறைவு காரணமாக கட்சி ஆரம்பிக்கவில்லை என்றுக் கூறினார் நடிகர் ரஜினிகாந்த். நீண்ட நாட்களாக அரசியலுக்கு வருவேன் எனக்கூறிய ரஜினிகாந்த், திடீரென அரசியல் வாழ்க்கை வேண்டாமென்று விலகினார். ஆனால் அரசியல் குறித்து பேசாத கமல்ஹாசன் திடீரென கட்சி ஒன்றை ஆரம்பித்தார். 2018-ல் மக்கள் நீதி மய்யம் என்னும் கட்சியைத் தொடங்கிய கமல்ஹாசன், நீண்ட நாட்களுக்கு பின் திமுக ஆதரவோடு வரும் 25ஆம் தேதி மாநிலங்களவை எம்பியாக பதவியேற்கிறார். இதற்காக நடிகரும், தனது நண்பருமான நடிகர் ரஜினிகாந்திடம் சென்று வாழ்த்துப் பெற்றுள்ளார். ரஜினியின் வாழ்த்து குறித்தும், மேலும் சினிமா வட்டாரத்தில் நிகழ்ந்த சுவாரஸ்ய தகவல்கள் குறித்தும் இந்த வார சினி பைட்ஸ் பகுதியில் காண்போம். 


நடிகை தன்யா ரவிச்சந்திரன் - ஒளிப்பதிவாளர் கௌதம் ஜார்ஜ்

காதலரை அறிமுகப்படுத்திய தன்யா ரவிச்சந்திரன்!

பழம்பெரும் நடிகரான ரவிச்சந்திரனின் பேத்தியும், பரதநாட்டியக் கலைஞர் லாவண்யா ஸ்ரீராமின் மகளுமான தன்யா ரவிச்சந்திரன், தனது திருமண அறிவிப்பால் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். சசிகுமாரின் பலே வெள்ளையத்தேவா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான தன்யா, தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். விஜய் சேதுபதியின் ‘கருப்பன்’ திரைப்படம் மூலம் பிரபலமானார். தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் பென்ஸ் திரைப்பட ஒளிப்பதிவாளர் கௌதம் ஜார்ஜ் என்பவருடன் தனக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக, இருவரும் முத்தமிட்டப்படி இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நடிகை தன்யா. திருமணம் அடுத்தாண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இந்த ஜோடிக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 


பெண் குழந்தைக்கு பெற்றோரான பாலிவுட் ஜோடி கியாரா அத்வானி - சித்தார்த் மல்ஹோத்ரா

பெண் குழந்தைக்கு தாயானார் கியாரா அத்வானி!

பாலிவுட்டின் நட்சத்திர ஜோடியான சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. காதல் திருமணம் செய்துகொண்ட இவர்கள் இந்தாண்டு தொடக்கத்தில், பிப்ரவரியில் ஒரு இன்ஸ்டா பதிவின் மூலம் தாங்கள் பெற்றோர் ஆகவிருப்பதை அறிவித்திருந்தனர். பிரபல இயக்குநர் விஷ்ணுவர்தனின் ஷெர்ஷா படத்தின் படப்பிடிப்பு போது இருவரும் காதல் வயப்பட்டனர். அதன்பின் 2023-ல் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். கியாரா அத்வானி, இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'கேம் சேஞ்சர்' படத்தில் நடித்திருந்தார். ஹ்ரித்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியீட்டிற்கு தயாராக இருக்கும் 'வார் 2' படத்திலும் கதாநாயகியாக கியாரா நடித்துள்ளார். சித்தார்த் மல்ஹோத்ரா, ஜான்வி கபூருக்கு ஜோடியாக ‘பரம் சுந்தரி’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் ஜூலை 25ஆம் தேதி வெளியாக உள்ளது. பெண் குழந்தைக்கு பெற்றோரான இருவருக்கும் பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 


ரஜினியிடம் வாழ்த்து பெற்ற கமல்ஹாசன்

ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்ற கமல்ஹாசன்... எதற்கு தெரியுமா?

தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை எம்.பிக்களாக உள்ள திமுக வழக்கறிஞர் வில்சன், தொமுச தலைவர் சண்முகம், புதுக்கோட்டை எம். முகமது அப்துல்லா, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அதிமுக ஆதரவுடன் எம்.பி.யான பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அதிமுகவின் சந்திரசேகர் ஆகிய 6 பேரின் பதவிக் காலம் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த காலியிடங்களுக்கு கடந்த ஜூன் மாதம் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் திமுகவின் ஆதரவோடு போட்டியின்றி மாநிலங்களவை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார் கமல்ஹாசன். தொடர்ந்து வரும் ஜூலை 25ஆம் தேதி பதவியும் ஏற்க இருக்கிறார். இந்நிலையில் நடிகரும், தனது நண்பருமான ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். இந்தச் சந்திப்பு தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்கவிருக்கும் என்னுடைய அருமை நண்பர் கமல்ஹாசனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார். முன்னதாக, ரஜினிகாந்த் உடனான சந்திப்பு குறித்து கமல்ஹாசன் தனது எக்ஸ் பதிவில், “புதிய பயணத்தை நண்பர் ரஜினிகாந்த் உடன் பகிர்ந்தேன்.. மகிழ்ந்தேன்...” என்று குறிப்பிட்டிருந்தார்.  


விஜய்யின் ஜனநாயகன் பட போஸ்டரை ரீ கிரியேட் செய்த விம்பிள்டன் நிர்வாகம்

விஜய் பாணியில் சின்னர்!

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’. அரசியலுக்கு வந்த பின் விஜய் நடிப்பில் வெளிவரும் படம் என்பதாலும், இது விஜய்யின் கடைசி படம் என்பதாலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இந்நிலையில் விம்பிள்டன் நிர்வாகம் வெளியிட்டுள்ள போஸ்டரால், விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் திளைத்துள்ளனர். முன்னதாக இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டிருக்கும். அதில் விஜய் வேன் மீது நின்று செல்ஃபி எடுப்பது போன்ற காட்சிகள் வடிவமைக்கப்பட்டிருக்கும். இது நிஜத்தில் ‘மாஸ்டர்’ படப்பிடிப்பின் போது நடந்தது என்பது நினைவுக்கூரத்தக்கது. ஆனாலும், இந்த ‘ஜனநாயகன்’ போஸ்டருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் இந்த போஸ்டரை போல விம்பிள்டன் நிர்வாகம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்ற ஜேனிக் சின்னர் கையில் கோப்பையுடன் ரசிகர்களுடன் செல்ஃபி எடுப்பதுபோல உள்ளது. இதற்கு முன்னரும் மாஸ்டர் படத்தில் மற்றொரு போஸ்டரையும் விம்பிள்டன் நிர்வாகம் ரீ - கிரியேட் செய்திருக்கும். இதனைப் பார்க்கும் இணையவாசிகள் பலரும் நம்ம பயதான் எவனோ (விஜய் ரசிகர்) என கமெண்ட் செய்து வைரலாக்கி வருகின்றனர். 


விரைவில் நடிகை சாய் தன்ஷிகாவை கரம்பிடிக்கும் விஷால்

விஷாலின் திருமணம் எப்போது?

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஷால். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி, மதகஜராஜா படங்கள், மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ஹிட் அடித்தன. தொடர்ந்து அவர் படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே நடிகர் சங்க கட்டிட பணிகளையும் பார்த்து வருகிறார். மேலும் நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடித்து திறக்கப்பட்டால்தான் தான் திருமணமும் செய்வேன் என கூறியிருந்தார் விஷால். பல்வேறு பிரச்சனைகள் காரணமாக அந்தக் கட்டிடம் கட்டி முடிக்க 9 ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னும் அந்த கட்டிடத்தின் பணிகள் முடியவில்லை. இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. தான் சொன்னதுபடி நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்கும் வரை திருமணம் செய்துகொள்ளாமல் இருந்து வருகிறார் விஷால். 

தற்போது விஷாலுக்கு 47 வயதாகும் நிலையில், அண்மையில் யோகிடா பட நிகழ்ச்சியில் அவர் நடிகை தன்ஷிகாவை திருமணம் செய்துகொள்ள போவதாக அறிவித்தார். அதன்படி வருகிற ஆகஸ்ட் மாதம் 29-ந் தேதி தனது பிறந்தநாள் அன்று தங்கள் திருமணம் நடைபெற இருப்பதாக விஷால் அறிவித்திருந்தார். இதையடுத்து விஷால் - சாய் தன்ஷிகா ஜோடிக்கு சமூக வலைதளங்களில் பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட விஷாலிடம் திருமணம் குறித்த கேள்வி ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்த விஷால், 9 வருஷம் தாக்குப்பிடித்துவிட்டேன், இன்னும் 2 மாதம் தாங்க மாட்டேனா என தெரிவித்துள்ளார். இதனால் விஷாலின் திருமணம் தள்ளிப்போகிறதா என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் நடிகர் சங்க கட்டிட பணி முடியாததே இதற்கு காரணம் என்றும், அது முடிந்த உடனே திருமணம் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.


பாடகி கோனி பிரான்சிஸ்

‘பிரெட்டி லிட்டில் பேபி’ புகழ் பாடகி உயிரிழப்பு!

கடந்த சில நாட்களாக இன்ஸ்டாகிராமை கலக்கி வந்த ‘பிரெட்டி லிட்டில் பேபி’ மற்றும் Stupid Cupid பாடல்களை பாடிய பாடகி கோனி பிரான்சிஸ் ஜூலை 17ஆம் தேதியன்று உயிரிந்தார். Pre-Beatles காலத்தில் புகழ்பெற்ற பாடகியாக விளங்கியவர் கோனி பிரான்சிஸ். இந்நிலையில் நிமோனியா தொற்றால் பாதிக்கப்பட்டு அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 87. கடந்த மே மாதம் இவர் அளித்த பேட்டியில், தனக்கு ‘பிரெட்டி லிட்டில் பேி’ பாடல் மறந்துவிட்டதாக கூறியிருந்தார் (வயது முதிர்வு காரணமாக). “63 ஆண்டுகளுக்கு முன்பு நான் பதிவு செய்த ஒரு பாடல் மில்லியன் கணக்கான மக்களின் இதயங்களைத் தொடுகிறது என்பதை நினைப்பது உண்மையிலேயே அற்புதமானது. அது ஒரு அற்புதமான உணர்வு” எனப் பேசியிருந்தார்.


சுலி பட ஷூட்டிங்கில் நடிகர் ரஜினிகாந்துடன் லோகேஷ் 

லியோக்கு பிறகு 2 மடங்காக உயர்ந்த லோகேஷ் கனகராஜ் சம்பளம்!

தமிழின் உச்ச நட்சத்திரங்களான கமல், விஜய்யை வைத்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து வருபவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவரது இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் கூலி. ஜெயிலர், வேட்டையன் படங்களை தொடர்ந்து கூலியில் நடித்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். இதில் நாகர்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைப்பில் தயாராகியுள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்திற்காக ரஜினி ரூ.260 முதல் ரூ.280 கோடிவரை சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. அதேபோல இப்படத்திற்காக இயக்குநர் லோகேஷ் ரூ.50 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள இயக்குநர் லோகேஷ் கனகராஜ், “ரஜினி சாரின் சம்பளம் பற்றி நான் எதுவும் சொல்ல முடியாது. ஆனால் என் சம்பளம் ரூ. 50 கோடி என நீங்கள் குறிப்பிட்டீர்கள். இது என்னுடைய முந்தைய படமான லியோ வெற்றியால் அதிகமானது. அந்தப் படம் அதிகமாக வசூலிக்க எனது சம்பளமும் அந்த படத்தில் வாங்கியதை விட இரண்டு மடங்கு அதிகமானது. இப்பணத்தில் நான் வரி கட்டுவதோடு எனது நண்பர்களுக்கும் உதவ முடிகிறது.” என பேசியுள்ளார்.


ஐ-ஃபோனை விட பத்து மடங்கு விலையுயர்ந்த பட்டன் ஃபோனை பயன்படுத்தும் ஃபகத்..

17 ஆண்டுகளாக பட்டன் ஃபோன் பயன்படுத்தும் ஃபகத் ஃபாசில், காரணம் என்ன?

இந்திய திரையுலகில் தற்போது முக்கிய நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஃபகத் ஃபாசில். தந்தை திரைப்பட இயக்குநராக இருந்தாலும், முழுக்க முழுக்க தன்னுடைய உழைப்பாலேயே திரையுலகில் முன்னுக்கு வந்தவர். எந்த கதாபாத்திரம் எடுத்தாலும், அதனை அப்படியே உள்வாங்கி நடிக்கக் கூடியவர். தமிழில் இவர் நடித்த அனைத்து படங்களும் வெற்றிப் படங்களே. மாமன்னன் படத்திற்கு பிறகு, தற்போது நடிகர் வடிவேலுடன் இணைந்து மாரீசன் என்ற படத்தில் நடித்துள்ளார் ஃபகத். இப்படம் வரும் 25ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் நடிகர் ஃபகத் ஃபாசில் பயன்படுத்தும் ஃபோனின் விலை எவ்வளவு என்ற கேள்வியே இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. சமீபத்தில் பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஃபகத், அங்கு ஃபோனில் பேசும் வீடியோ ஒன்று வெளியானது. அதில் அவர் பட்டன் ஃபோன் பயன்படுத்துவதை ரசிகர்கள் கவனித்தனர். இவ்வளவு பெரிய நடிகர் பட்டன் ஃபோன் பயன்படுத்துகிறாரா? என வியப்பிலும் ஆழ்ந்தனர். ஆனால் இந்த பட்டன் ஃபோன் ஐ-ஃபோன்களை விட 10 மடங்கு அதிக விலை கொண்டவை என்பதுதான் ஆச்சர்யம்.

பிரிட்டனை சேர்ந்த Vertu என்ற பிரபல ஃபோன் நிறுவனத்தின் பட்டன் ஃபோன் தான் இது. Ascent Retro Classic Keypad Phone என்பது இதன் பெயர். 2008ஆம் ஆண்டு Vertu நிறுவனம் இந்த ஃபோனை அறிமுகம் செய்தது. ஆனால் அதன் விற்பனை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 17 ஆண்டுகால பட்டன் ஃபோனையா ஃபகத் பயன்படுத்தி வருகிறார் என பலரும் ஆச்சரியமாக கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த ஃபோனின் விலை இந்திய மதிப்பில் ரூ.10 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இது, டைட்டானியம் , நீலக்கல் படிகம், கையால் தைக்கப்பட்ட லெதர் என பல்வேறு தனித்துவங்களை கொண்டிருக்கிறது. மேலும், பட்டன் ஃபோனாக இருந்தாலும் ப்ளூடூத், ஜிபிஆர்எஸ், எஸ்எம்எஸ் மற்றும் எம்எம்எஸ் இணைப்புகள் உள்ளன. ஸ்டீல் கீ பேட் கொண்டுள்ளது. நான் ஸ்மார்ட் ஃபோன் பயன்படுத்த மாட்டேன், எந்த சமூக ஊடகங்களிலும் இல்லை என ஏற்கனவே நேர்காணல் ஒன்றில் ஃபகத் ஃபாசில் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்