உண்மையில் மாதம்பட்டி ரங்கராஜிடம் இருந்து ஜாய் கிரிசில்டா என்ன எதிர்பார்க்கிறார்?

Update:2025-09-16 00:00 IST
Click the Play button to listen to article

ஒருவரின் அந்தரங்க விஷயங்களையும், தனிப்பட்ட விஷயங்களையும் மற்றொருவர் பேசுவது என்பதும், விமர்சிப்பதும் தவறே. அப்படிப்பட்ட விஷயங்கள் பொதுவெளிக்கு வராமல் இருக்கும்வரை, அவை கிசுகிசுவாகவே மக்களால் கடந்த செல்லப்படுகிறது. ஆனால் அதே விஷயங்கள் பொதுவெளிக்கு வந்துவிட்டால், யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கருத்து சொல்லி, நீதிபதிகளாக மாறி தீர்ப்பளிக்க தொடங்கி விடுகின்றனர். அப்படித்தான் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிசில்டாவின் விவகாரம், எங்கு திரும்பினாலும் பேசப்பட்டு, விவாதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இதுபோன்ற பிரச்சனைகள் இன்று சமூகத்தில் பெருகிவிட்டதாக தெரிவித்துள்ள பெண் துப்பறிவாளரான பிரசன்னா, மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் கிரிசில்டா விவகாரம் குறித்து பல்வேறு கருத்துகளை உடைத்து பேசியுள்ளார். ராணி ஆன்லைனுக்கு அவர் அளித்துள்ள நேர்காணலை பார்ப்போம்.


கமிஷனர் அலுவலகத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் புகாரளித்தபோது...

மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிசில்டா தெரிவித்துள்ள புகார் குறித்து உங்கள் பார்வையில் எப்படி பார்க்கிறீர்கள்?

மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிசில்டா புகார் சொன்னதைக் கூட ஏதோ ஒரு வகையில் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், அந்தப் புகாரில் ஜாய் தெரிவித்துள்ள வார்த்தைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. சென்னை கமிஷனர் அலுவலகத்தில் ஜாய் அளித்துள்ள புகாரில், என் கணவர் மாதம்பட்டி ரங்கராஜ் என்னை விட்டுச் சென்றுவிட்டார், என் வயிற்றில் அவரின் குழந்தை வளர்கிறது, நான் இப்போது 7 மாதம் கர்ப்பமாக உள்ளேன், அவர் எனக்கு வேண்டும் என்று தெரிவித்துள்ளார். புகாரில் ஜாய் குறிப்பிட்டுள்ள வார்த்தையே தவறு. மாதம்பட்டியின் மனைவி நான் என்று ஜாய் கிரிசில்டா எப்படி சொல்லலாம்? ஏற்கனவே மாதம்பட்டி ரங்கராஜுக்கு திருமணமாகி ஸ்ருதி என்ற மனைவி இருக்கிறார். அவர்களுக்கு விவாகரத்து ஆகவில்லை. அப்படி இருக்கையில் தன்னை எப்படி ரங்கராஜின் மனைவி என்று ஸ்ருதி சொல்லலாம்? இவர் மனைவி என்றால்... ஸ்ருதி யார்? 

ஜாய் கிரிசில்டாவின் இந்த குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாதே. அதற்குபதிலாக... ஜாய், இவ்வாறு தெரிவித்திருக்கலாம். நாங்கள் லிவ் இன் உறவில் இருந்தோம், என்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லியிருந்தார், அதன் அடிப்படையில் அவருடன் உறவில் இருந்தேன், இப்போது நான் கர்ப்பமாக இருக்கிறேன், இந்த நேரத்தில் அவர் என்னை விட்டுவிட்டு சென்றுவிட்டார் என்று ஜாய் கூறியிருக்கலாம். ஆனால் இந்த குற்றச்சாட்டையும் கூட ஜாய் கிரிசில்டா முழுமையாக தெரிவிக்க முடியாது. இது எல்லோருக்குமே தெரியும். ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கும்போது, அந்த மனைவி என்ற ஸ்தானத்திற்கு ஜாய் சென்றதே தவறு.

ஜுடீஷியல் செப்பரேஷனில் தானே மாதம்பட்டி ரங்கராஜ் இருந்தார். மனைவியை விவாகரத்து செய்யவில்லையே? ஜுடீஷியல் செப்பரேஷனுக்கும் விவாகரத்திற்கும் வித்தியாசம் உள்ளதே. அந்த வகையில் முறைப்படி விவாகரத்து பெறாத ஒருவரை நீங்கள் எப்படி திருமணம் செய்ய முடியும்? எப்படி ஒரு குழந்தைக்கு தாய் ஆவீர்கள்? அவர் விட்டுவிட்டு போய்விட்டார் என்று பொதுவெளியில் ஜாயால் எப்படி குற்றம் சொல்ல முடியும்? ஜாய் செய்தது தவறான செயல்தானே? ஜாய் மட்டுமல்ல, ஜாயை போல பல பெண்கள் இதுபோன்ற உறவில் இருக்கின்றனர். பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் இதுமாதிரி உறவுகளில் உள்ளனர். இந்த உறவுகளில் இருவருமே உண்மையாக இருப்பார்கள் என்று சொல்லிவிட முடியாது. ஒருவர் எமோஷனலாக உண்மையாக இருப்பார். இன்னொருவர் ஈசியாக விட்டுவிட்டு சென்றுவிடுவார். இதுபோன்ற உறவுகளில் பணம் உள்ளிட்ட பல மோசடிகள் நடக்கின்றன. 


மனைவி ஸ்ருதியுடன் ரங்கராஜ் & கிரிசில்டாவுடன் திருமணக் கோலத்தில் ரங்கராஜ்

மாதம்பட்டி ரங்கராஜ் - கிரிசில்டா விவகாரத்தில், ரங்கராஜிடம் போராட வேண்டிய விஷயத்தை, பொதுவெளியில் வந்து மக்களிடம் சொல்லி ஜாய் கிரிசில்டா போராடுவது தவறு. மேலும், முதலமைச்சர், பிரதமர் உள்ளிட்டோரை இவ்விவகாரத்தில் ஜாய் கிரிசில்டா இழுப்பதும் தவறு. ஒரு சாதாரண பெண்ணுக்கு முதலமைச்சரும், பிரதமரும் நீதி சொல்லமாட்டார்களா என ஜாய் கேட்கிறார். உண்மையை சொல்ல வேண்டும் என்றால், முதலமைச்சரும், பிரதமரும் சட்டப்பூர்வ மனைவியான ஸ்ருதிக்குதானே சப்போர்ட் செய்ய முடியும். உங்களுக்கு எப்படி ஆதரவு தெரிவிக்க முடியும்? 

இவ்விவகாரத்தில் பெரும்பாலானவர்கள் கிரிசில்டாவைதான் குற்றம் சொல்கிறார்கள். ஆனால், சட்டப்பூர்வ மனைவி இருக்கும்போது, கிரிசில்டாவை கோயிலில் வைத்து மாலை மாற்றி, தாலிக்கட்டி திருமணம் செய்தது ரங்கராஜின் தவறுதானே?

நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் இன்று சமூகம் இப்படித்தான் இருக்கிறது. ஆனால் சேஃப்டி யாருக்கு முக்கியம்? ஒரு ஆண் பெண்ணை ஏமாற்றுவதும், ஒரு பெண் ஆணை ஏமாற்றுவதும், மனிதர்கள் சக மனிதர்களை ஏமாற்றுவதும் கால காலமாக நடந்துகொண்டு இருக்கிறது. முன்னெச்சரிக்கையாக யார் இருக்க வேண்டும்? மாதம்பட்டி ரங்கராஜ் கர்ப்பம் ஆக மாட்டாரே. பெண்கள் தானே கர்ப்பம் ஆவோம். இந்த விவகாரத்தில் மாதம்பட்டியைவிட சட்ட சிக்கல் ஜாய் கிரிசில்டாவுக்குதான் அதிகம். சாதாரணமானவர்களுக்குக் கூட இதுபற்றி தெரியும்போது, படித்த உங்களுக்கு ஏன் தெரியாமல் போனது. மனித இயல்பு என்பதே, தேவை என்னும்போது காலைப்பிடிப்பதும், தேவையில்லாதபோது காலை வாரிவிடுவதும்தான். 

அத்துடன் ஜாய் ஒரு வீடியோவை வெளியிட்டார்கள். ஹாய் பொண்டாட்டி என மாதம்பட்டி ரங்கராஜ் பேசுவதுபோன்ற இன்டிமஸி வீடியோ அது. ஆனால் அந்த வீடியோவில் யார் பெயரையும் ரங்கராஜ் குறிப்பிடவில்லையே. அந்த வீடியோவில் மனைவி என்று ரங்கராஜ் யாரை சொல்லியுள்ளார் என்று யாருக்கு தெரியும். ஸ்ருதிக்கும் சொல்லியிருக்கலாம். கிரிசில்டாவுக்கும் சொல்லியிருக்கலாம், இல்லை வேறு யாருக்காவது கூட சொல்லியிருக்கலாம். 


ஜாய் கிரிசில்டா - மாதம்பட்டி ரங்கராஜ் ஜோடியாக...

ஜாய், அதுபோன்ற இன்டிமஸி வீடியோக்களை வெளியிட்டது ஏன்? தங்களுக்குள் இருந்த உறவை நிரூபிக்கவா? அல்லது ரங்கராஜை அசிங்கப்படுத்தவா?

உண்மை என்னவென்று ஜாய் கிரிசில்டாவுக்கு மட்டும்தான் தெரியும். திருமணம் போன்ற மகிழ்ச்சியான நிகழ்வுகளுக்கு இன்விடேஷன் அடிக்கிறோம், புகைப்படக் கலைஞர்களை வைத்து புகைப்படம் எடுக்கிறோம். ஏனென்றால் இவை எல்லாம் மகிழ்ச்சியான தருணங்களை நினைவில் வைத்து அசைப்போடத்தான். ஆனால் அந்த இன்விடேஷன்களும், புகைப்படங்களும், பிரச்சனை என்று ஒன்று வரும்போது அத்தாட்சியாக மாறிவிடுகின்றன. அதுதான் ஜாய் கிரிசில்டா வெளியிட்டுள்ள வீடியோக்களும், புகைப்படங்களும் நமக்கு தெரிவிக்கின்றன. பிரச்சனைகள் வரும்வரை, அதுபோன்ற வீடியோக்கள் மெமரீசாக இருக்கும். பிரச்சனைகள் வந்துவிட்டால், வேறு மாதிரியாக வெளிப்படுத்தப்படுகிறது. 

இதுபோன்ற உறவுகளில் ஈடுபடும் பெண்களோ... ஆண்களோ... சட்ட சிக்கல் இல்லாததை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். அதிகாரப்பூர்வமாக விவாகரத்து ஆகிவிட்டதா என பார்க்க வேண்டும். குறிப்பாக இந்த விஷயத்தில் பெண்கள் அதிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒருவருடன் உறவில் இருக்கிறீர்கள் என்றால் வெளிப்படையாக, யாருடன் உறவில் இருக்கிறீர்களோ, அந்த நபரை பொதுவெளியில் உங்களை அறிமுகம் செய்ய சொல்லி ஆரம்பத்திலேயே வலியுறுத்த வேண்டும். அப்போதுதான் பெண்கள் பயமின்றி இருக்க முடியும். 

நாங்கள் பொது வெளியில் ஒன்றாகத்தான் இருந்தோம் என்று ஜாய் கிரிசில்டா சொல்கிறாரே? எங்களைச் சார்ந்த அனைவருக்கும் எங்கள் விவகாரம் தெரியும் என்று கூறுகிறாரே?

எல்லாம் சரி. திருமணம் ஆகி பதிவு செய்தார்களா? அது முடியாதல்லவா... சட்டப்பூர்வமாக அதை செய்ய முடியாதல்லவா?


ரங்கராஜ் உடனான தனது வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்ட கிரிசில்டா

இதுபோன்ற விவகாரங்கள் குறித்து துப்பறிவாளராக நீங்கள் நிறைய வழக்குகள் பார்த்திருப்பீர்கள்... உண்மையில் இதுபோன்ற விவகாரங்களில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் யார்? ஆண்களா? பெண்களா?

உண்மையை சொன்னால் நிறைய பேர் என்னைத் திட்டுவார்கள். இதுபோன்ற உறவுகளில் ஆண்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஒரு பெண்ணுடன் லிவ் இன் உறவில் இருக்கும் ஆண், அவளை முழுமையாக நம்பியிருக்கும்போது, அவனை அப்படியே கழட்டிவிட்டு செல்லும் பெண்கள்தான் இங்கு அதிகம். இதனால், வெளி உலகிற்கு திடமாக காட்சியளிக்கும் ஏராளமான ஆண்கள், எங்களைப் பொன்ற துப்பறிவாளர்களிடம் வந்து, தன்னை ஏமாற்றி சென்ற பெண்ணை கண்டுபிடித்து தரும்படி கண்ணீர்விட்டு அழுகின்றனர். எங்களிடம் வழக்குக்காக வரும் பெண்களை அழாதீர்கள் என்று சொல்லும் நாங்கள்தான், எங்களிடம் வழக்குக்காக வரும் ஆண்களை, அழுதுவிடுங்கள், மனது லேசாசிவிடும் என்று கூறுவோம். ஏனென்றால் ஆண் என்பவன் அழக்கூடாது என்று சமூகம் சொல்லி வைத்துள்ளது அல்லவா... உறவுகளில் இன்றைய காலக்கட்டத்தில் ஆண்கள்தான் அதிகம் ஏமாறுகிறார்கள். 

மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் கிரிசில்டா விவகாரத்தில் ஒருவரை ஒருவர் மாறிமாறி குற்றம்சாட்டிக் கொள்கின்றனரே?

மனிதர்களே இப்படித்தான். முறையாக நடைபெற்ற திருமணங்களிலேயே சண்டை என்று வந்துவிட்டால் கணவனும், மனைவியும் ஒருவர் மீது ஒருவர் பழி சுமத்தும்போது, ஜாய்-ரங்கராஜின் உறவில் இதுவெல்லாம் சகஜம். லிவ் இன் உறவு என்பது நன்றாக சென்றுகொண்டிருக்கும் வரை எந்த பிரச்சனையும் இல்லை. பிரச்சனை என்று வந்துவிட்டால், இப்படித்தான் அப்படியே உறவை துண்டித்துவிட்டு சென்றுவிடுவார்கள். 


மகிழ்ச்சியான தருணங்களில் ரங்கராஜ் - கிரிசில்டா

மாதம்பட்டி ரங்கராஜிடமிருந்து உண்மையில் ஜாய் கிரிசில்டா என்னதான் எதிர்பார்க்கிறார்?

தன் வயிற்றில் வளரும் குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ்தான் அப்பா என்பதை நிரூபிப்பதே ஜாய் கிரிசில்டாவின் எதிர்பார்ப்பு என்பதுபோல்தான் உள்ளது. ஆனால், இருவருக்கும் இடையிலான பிரச்சனையில் உண்மையில் பாதிக்கப்படப்போவது ஜாய் கிரிசில்டாவின் வயிற்றில் வளரும் குழந்தையும், ஸ்ருதியின் இரண்டு குழந்தைகளும்தான். பெரியவர்களைவிட குழந்தைகளுக்குத்தான் பாதிப்பு அதிகம். 

 தொடரும்...

Tags:    

மேலும் செய்திகள்