உலக மாடலிங்கில் கலக்கும் இந்திய சிறுவன் - 13 நாடுகளை தோற்கடித்து அசத்தல்!

2025-ல் நடைபெற்ற Little Miss & Mister Universe போட்டியில் கலந்துகொண்டு இந்தியாவை சேர்ந்த 9 வயது சிறுவன் ஆலன் என்பவர் டைட்டில் பட்டம் வென்றுள்ளார்.;

Update:2025-08-19 00:00 IST
Click the Play button to listen to article

அழகுப் போட்டிகள் என்பது தேசம், சர்வதேசம் என ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றன. இதில் மிஸ்டர், மிஸ் என ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியாக பகுதிவாரியாக போட்டிகள் நடத்தப்படுகின்றன. உலகளவிலான போட்டிகளில் பல்வேறு நாடுகளை சேர்ந்த போட்டியாளர்கள் கலந்துகொள்வர். அதுபோல தேசிய அளவிலான போட்டிகளில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் கலந்துகொள்வார்கள். இந்நிலையில் 2025-ல் நடைபெற்ற Little Miss & Mister Universe போட்டியில் கலந்துகொண்டு இந்தியாவை சேர்ந்த 9 வயது சிறுவன் ஆலன் என்பவர் டைட்டில் பட்டம் வென்றுள்ளார். 13 நாடுகள் போட்டியில் பங்கேற்ற நிலையில், யூனிவர்சல் லிட்டில் மிஸ்டர் டைட்டில் வின்னர், பெஸ்ட் நேஷனல் காஷ்டியூம் அவார்டு, பெஸ்ட் பெர்ஃபாமர் என மூன்று பட்டங்களையும் கேரளாவை சேர்ந்த ஆலன் பெற்றுள்ளார். இப்போட்டியில் மட்டுமின்றி கேரளா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் பல பேஷன் ஷோக்களில் ஆலன் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் சிறுவன் ஆலன், மாடலிங் துறை மீதான தனது ஆர்வம் குறித்து ராணி ஆன்லைனுக்கு அளித்துள்ள நேர்காணலை பார்ப்போம்.  


பெற்றோருடன் சிறுவன் ஆலன்

உங்களைப் பற்றி சொல்லுங்கள்...

என் பெயர் ஆலன். நான் நான்காம் வகுப்பு படிக்கிறேன். எனக்கு கொஞ்சம் கொஞ்சம்தான் தமிழ் தெரியும். என் வீட்டில், நான், அப்பா, அம்மா மட்டும்தான் இருக்கிறோம். என் அப்பா பெயர் ஹரிதாஸ். அம்மா பெயர் மினிமோர். அப்பா வேலை செய்கிறார். அம்மா வீட்டில்தான் இருக்கிறார்கள். இதுதான் எனது சின்ன குடும்பம்.


எனக்கும் அப்துல் கலாம் சார்போல விஞ்ஞானியாக ஆகவேண்டும் - சிறுவன் ஆலன்

உங்கள் வெற்றிக்கு யார் காரணம்?

என்னுடைய வெற்றிக்கு எனது அம்மாதான் காரணம். எனக்கு சிறுவயதில் இருந்தே நடிக்க வேண்டும் என்று ஆசை. அதை தெரிந்துகொண்டு என் அப்பா என்னை மாடலிங்கில் சேர்த்துவிட்டார்கள். அதிலிருந்து முயற்சி செய்து, முயற்சி செய்து, உழைத்து இப்போது லிட்டில் மிஸ்டர் யுனிவெர்ஸ் டைட்டில் வென்றுள்ளேன். என்னுடைய நண்பர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் என்னை வாழ்த்தினார்கள். இப்போது நான் அங்கு ஒரு செலப்ரிட்டி போலத்தான். எனக்கு திலகவதி டீச்சர் ரொம்ப பிடிக்கும். 2ஆம் வகுப்புவரை அவர்தான் எனது ஹிந்தி டீச்சர். அவர்களுக்கு சின்ன வயதில் இருந்து என்னுடைய முடி ரொம்ப பிடிக்கும்.

மாடலிங் துறையை தேர்ந்தெடுக்க காரணம் என்ன?

சிறுவயதில் அதிகம் நடித்து விளையாடுவேன். அதைப்பார்த்த என் அம்மா, எனது நடிப்புத்திறமையை பார்த்து மாடலிங்கில் சேர்த்துவிட்டார்கள். அதனால் நானும் மாடலிங்கை தேர்வு செய்துவிட்டேன்.


மாடலிங்கில் டிப்ளமோ சான்று பெற்றுள்ள ஆலன் ஹரிதாஸ்

எதிர்கால கனவு என்ன?

எனக்கு அப்துல் கலாம் சார்போல பெரிய விஞ்ஞானியாக ஆகவேண்டும் என்ற ஆசை உள்ளது. என்னுடைய தாத்தாவும் ஒரு அறிவியலாளர்தான். அதுபோல எனக்கும் ஒரு விஞ்ஞானியாக வேண்டும் என்ற ஆசை உள்ளது.

என்னுடைய ஃபேஷன்தான் மாடலிங். எனக்கு ஒரு பெரிய நடிகர் ஆகவேண்டும் என்ற ஆசை உள்ளது. எனது வீட்டில் எனக்கு ஆதரவு இருப்பதால், மாடலிங், ஆக்டிங் என இரண்டையும் என்னால் பார்த்துகொள்ள முடியும். காலையில் 8 மணிக்கு எழுந்திருப்பேன். சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கு செல்வேன். வீட்டிற்கு நான்கு மணிக்கு வருவேன். 10 மணிக்கு படிப்பேன். 11 மணிக்கு தூங்கிவிடுவேன்.

யாருக்கு நன்றி சொல்ல விரும்புகிறீர்கள்?

முதலில் எனது ஆசிரியர் தாஜ்-க்கு நன்றி சொல்லுவேன். என்னுடைய வழிகாட்டி அஜித் சாருக்கு நன்றி கூறுவேன். நான் அதிகம் நன்றி சொல்ல கடமைப்பட்டவர்கள் என் பெற்றோர்கள்தான். அவர்களுக்கு மிகப்பெரிய நன்றி.


எனக்கு மிகவும் பிடித்த நடிகர் மோகன்லால் - ஆலன்

மாடலிங் துறைக்கு வரவிரும்பும் சிறுவர்களுக்கு நீங்கள் கூறுவது?

முயற்சி செய்யுங்கள். நிச்சயம் வெற்றிக் கிடைக்கும். பயிற்சி ஒருவரை முழுமையாக்கும்.

மாடலிங் துறையில் உள்ள வாய்ப்புகள் பற்றி தெரியுமா?

உழைத்தால், நன்கு முயற்சித்தால் விளம்பரங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

உங்களுக்கு மிகவும் பிடித்தவர்?

ஷாருக்கான். அவருடைய ஸ்டைல், அவருடைய போசஸ் எனக்கு பிடிக்கும். எனக்கு மிகவும் பிடித்த நடிகர் மோகன்லால். ஷாருக்கானின் இளையமகன் இந்த ஹேர்ஸ்டைல்தான் வைத்திருக்கிறார். அதனால்தான் நானும் இந்த ஹேர்ஸ்டைல் வைத்திருக்கிறேன். எனக்கு மோகன்லாலின் காமெடி மிகவும் பிடிக்கும். அவர் சிறந்த நடிகர்.


ஓய்வு நேரத்தில் மரக்கன்றுகள் நடுவது பிடிக்கும் - ஆலன்

உங்களை அதிகம் ஊக்கப்படுத்துபவர்கள் யார்?

அம்மா, நண்பர்கள், உறவினர்கள் என்னுடைய ஆலோசகர் அதுல் சார் ஆகியோர் என்னை அதிகம் ஊக்கப்படுத்துவார்கள். எப்போதும் உங்களை நம்புங்கள். ஆயிரம் முறை பயிற்சி செய்பவர்களை பார்த்து பயப்படத் தேவையில்லை, ஆனால் ஒரு விஷயத்தை ஆயிரம் முறை பயிற்சி செய்பவர்களைப் பார்த்து நீங்கள் பயப்பட வேண்டும். எனக்கு ‘லிட்டில் மிஸ்டர் இந்தியா’ ஆகவேண்டும் என்ற ஆசை உள்ளது. 

உங்களை போன்ற பள்ளி மாணவர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன?

நன்றாக படியுங்கள். படித்தால் தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெற முடியும். தேர்வில் தேர்ச்சி பெறமுடியும். ஃபோன் பார்த்தாலும், நான் படிப்பதில் கவனமாக இருப்பேன். 

லிட்டில் மிஸ்டர் யூனிவர்ஸ் பட்டம் வாங்கிய உணர்வு எப்படி இருந்தது?

எனக்கு ரொம்ப சந்தோஷமாக, பெருமையாக இருந்தது. எனக்கு டைட்டில் கிடைக்கணும், கிடைக்கணும், கிடைக்கணும் எனும் அளவிற்கு ஆசை இருந்தது. அதனால் நான் தைரியமாக பயமில்லாமல் செய்தேன். எனக்கு டிராஃபி, க்ரௌன் கொடுத்தார்கள். 13 நாடுகளில் இருந்து பங்கேற்றனர். எல்லோரும் முயற்சி செய்யுங்கள். 

ஓய்வு நேரத்தில் என்ன செய்வீர்கள்?

மரம் வைப்பது, வரைவது மிகவும் பிடிக்கும். 


விராட் கோலி பிடிக்கும் - சிறுவன் ஆலன்

நண்பர்களுடன் நேரம் எப்படி செலவிடுவீர்கள்?

பள்ளிநேரத்தில் நண்பர்களுடன் இருப்பேன். சவுரியா அர்மான் த்ரூதான் எனது நெருங்கிய நண்பர்.

மேக்கப், காஷ்டியூம் எல்லாம் யார் செய்வார்கள்?

அம்மாதான் காஷ்டியூம்ஸ் தேர்வு செய்வார்கள். மேக்கப்பும் அம்மாதான் போடுவார்கள். சிறுவயதிலிருந்தே இந்த ஹேர்ஸ்டைல்தான். எல்லாம் அம்மாதான். 

இதுவரை எத்தனை போட்டிகளில் பங்கேற்றுள்ளீர்கள்?

5க்கும் மேற்பட்ட போட்டிகளில் கலந்துகொண்டுள்ளேன். ஃபேப் ஸ்டார் ஆஃப் இந்தியா, லிட்டில் மிஸ்டர் அண்ட் மிஸ் யூனிவர்ஸ் உள்ளிட்ட போட்டிகளில் கலந்துகொண்டுள்ளேன். 

பிடிக்காத விஷயம்?

என்னை கட்டாயப்படுத்துவது எனக்கு பிடிக்காது. 

உங்களுக்கு பிடித்த விளையாட்டாளர்?

விராட் கோலி எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் நிறைய சாதனைகள் படைத்துள்ளார். என் அப்பாக்கூட கிரிக்கெட் விளையாடுவேன். நன்றாக பாட்டு பாடுவேன். வரைவேன். கேரம் பிடிக்கும். கிரிக்கெட் பிடிக்கும். ரொனால்டோ ரொம்ப பிடிக்கும். 

போட்டிகளில் வெற்றிப்பெற்ற உணர்வு எப்படி இருந்தது?

ரொம்ப சந்தோஷமாக, பெருமையாக இருந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்