எதிர்பாராத தனவரவு
2025 மே 20-ஆம் தேதி முதல் 2025 மே 26-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உடல் உழைப்பு இல்லாமலேயே வேலை வாய்ப்பு அல்லது வருமானத்தை சம்பாதிப்பதற்கான வாரமாக இருக்கும். இந்த வாரத்தில் தெய்வ தரிசனம், ஆலய தரிசனம் அமையும். குடும்பத்தில் சுப காரியங்கள், சுப நிகழ்ச்சிகள் நடக்காமல் இருந்தால், அது நடக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி, சந்தோஷம் உண்டாகும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் உருவாகும். நீங்கள் ஏதாவது முயற்சி செய்தால், அந்தக் காரியங்கள் கைகூடும். யாரை நம்பி இருக்கிறீர்களோ, அவர்களால் உங்களுக்கு நன்மை ஏற்படும். நீங்கள் எதிர்பார்த்த, எதிர்பாராத அனைத்து செய்திகளும் சாதகமாக வரும். உங்கள் வாழ்க்கையில் ஏற்றமும், முன்னேற்றமும் இருக்கும். இளைய சகோதர-சகோதரிகளாலும் நன்மைகள் உண்டு. நீங்கள் எந்த அளவுக்கு முயற்சி எடுக்கிறீர்களோ, அந்த அளவுக்கு வெற்றி பெறுவீர்கள். புதிய காதல் விஷயங்கள் ஏற்படலாம். நட்பால் உங்கள் வாழ்க்கையில் ஏற்றமும், முன்னேற்றமும் இருக்கும். எதிர்பாராத தனவரவு, பணவரவு உண்டு. வேலை வாய்ப்புகளைப் பொறுத்தவரை பரவாயில்லை. வேலையில் யாரெல்லாம் பதவி உயர்வு, ஊதிய உயர்வு, பாராட்டுகள், போனஸ் அல்லது நிலுவைத் தொகைக்காக காத்திருக்கிறீர்களோ, அவர்கள் அனைவரின் எதிர்பார்ப்புகளும் பூர்த்தியாகும். இந்த வாரம் காளியையும் விநாயகரையும் பிரதானமாக வழிபடுங்கள்.