உடல் ஆரோக்கியத்தில் கவனம்
2025 ஆகஸ்ட் 12-ஆம் தேதி முதல் 2025 ஆகஸ்ட் 18-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். வராத பணம் கைக்கு வரும். அதை நீங்கள் நல்ல விதமாக கையாளும் சூழ்நிலையும் உருவாகும். நீண்ட நாட்களாக நிறைவேறாத கனவுகள் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு நிறைவேறும். உங்களின் முயற்சிகளுக்கு, ஒரு தெய்வீக சக்தி அல்லது ஒரு நபர் துணையாக இருப்பார். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குறிப்பாக உங்கள் உடல்நலம் மற்றும் தாயாரின் ஆரோக்கியம் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். விற்பனை ஆகாமல் இருந்த சொத்துக்கள் இந்த வாரம் விற்பனையாவதற்கான வாய்ப்புகள் அதிகம். வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு வேலை உண்டு. ஆனால் அதில் போராட்டங்கள் இருக்கலாம். சனி பகவானின் பார்வை காரணமாக பணியிடத்தில் நிதானமும் பொறுமையும் அவசியம். சிறு தொழில்கள், சுயதொழில், ஆன்லைன் வியாபாரங்கள் சிறப்பாக இருக்கும். கமிஷன் ஏஜென்சி, ரியல் எஸ்டேட், டிஜிட்டல் மார்க்கெட்டிங் போன்ற துறையினருக்கு இந்த வாரம் நன்மை தரும். உயர்கல்வி படிக்க விரும்புபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும். எதிர்பாராத உதவிகள் மற்றும் நட்புகளும் உருவாகும். முருகன் மற்றும் சிவபெருமானை வழிபடுவது நன்மைகளை அதிகரிக்கும்.