முயற்சி வெற்றி பெறும்

Update:2025-08-26 00:00 IST

2025 ஆகஸ்ட் 26-ஆம் தேதி முதல் 2025 செப்டம்பர் 1-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். நீங்கள் எதை அடைய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதை அடைவதற்கான வாய்ப்புகள் அதிகம். குருவும் சுக்கிரனும் உங்கள் ராசியின் மூன்றாம் வீட்டில் சஞ்சரிப்பதால், நீங்கள் எதிர்பார்த்த செய்திகள் அல்லது தகவல்கள் உங்களுக்கு சாதகமாக வந்து சேரும். உங்கள் முக்கியமான வேலைகளை முடிக்க தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். கடவுளின் அருள் உங்களுக்கு துணையாக இருக்கும். வேலை வாய்ப்புகளைப் பொறுத்தவரை, சனி மற்றும் செவ்வாய் கிரகங்களின் நிலை காரணமாக வேலை இருக்கும். ஆனால், புதன் உங்கள் ராசியின் நான்கு மற்றும் ஐந்தாம் வீட்டில் இருப்பதால், உங்கள் பணியில் நீங்கள் அதிக முயற்சி செய்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். இல்லையென்றால், வேலை திருப்தியற்றதாக இருக்கும். வணிகத்தைப் பொறுத்தவரை, வருமானம் இருக்கும், ஆனால் முதலீடுகளை கவனமாக மேற்கொள்ளுங்கள். 12 ஆம் வீட்டில் உள்ள சனி வக்ர கதி நிலை காரணமாக, முதலீடு செய்ய வாய்ப்பு கிடைத்தால் அதை தவறவிடாதீர்கள். உங்கள் வாழ்க்கையில் நல்ல நண்பர்கள் இருப்பார்கள், அல்லது புதிய நட்புகள் உருவாகும். அவர்களின் உதவியும் உங்களுக்கு கிடைக்கும். இந்த வாரம் விநாயகரையும் முருகனையும் வழிபடுங்கள்.

Tags:    

மேலும் செய்திகள்

கவனம் தேவை