முயற்சிகள் கைகூடும்

Update:2025-09-02 00:00 IST

2025 செப்டம்பர் 02-ஆம் தேதி முதல் 2025 செப்டம்பர் 8-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் பொருளாதார நிலை சீராக இருக்கும். ஆனால், சனி பகவான் 12-ம் இடத்தில் வக்ரகதியில் இருப்பதால், செலவுகள் தொடர்ந்து அதிகமாக இருக்கும். நண்பர்கள் மூலமாக ஆதரவு கிடைக்கும். வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை, ஒரு பயமும் திருப்தியற்ற மனநிலையும் இருந்தாலும், புதிய வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. அரசு அல்லது தனியார் துறையில் உங்களுக்கு வேலை உண்டு. வேலையை விட்டு வெளியேற நினைப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அதேபோல் வியாபாரத்தை பொறுத்தவரை இந்த வாரம் சுமாராகத்தான் இருக்கிறது. அதனால் அதிகப்படியான முதலீடுகள் செய்வதை தவிர்ப்பது நல்லது. திருமணம் தள்ளிப் போய்க் கொண்டிருப்பவர்களுக்கு இந்த வாரம் நல்ல செய்தி உண்டு. திருமணத்திற்கான வாய்ப்புகள் உருவாகும். உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். முயற்சி ஸ்தானத்தில் குருவும் சுக்கிரனும் இருப்பதால், நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை நோக்கிச் செல்லும். இறைவன் உங்களுக்கு ஒரு கண்ணுக்குத் தெரியாத துணையாக இருந்து அருள்புரிவார். உயர்கல்வி மற்றும் ஏற்றுமதி, இறக்குமதி தொழில்களில் இருப்பவர்களுக்கும் நல்ல பலன்கள் உண்டு. இந்த வாரம் நீங்கள் விநாயகரையும் பைரவரையும் வழிபடுவது நல்லது.

Tags:    

மேலும் செய்திகள்

கவனம் தேவை