வேலையில் உயர்வு
2025 செப்டம்பர் 16-ஆம் தேதி முதல் 2025 செப்டம்பர் 22-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் உங்கள் நிதி நிலைமை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். வருமானம் இருந்தாலும், செலவுகளும் அதிகமாகவே இருக்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி பெறும். ஒருபக்கம் உங்களுடைய முயற்சி ஸ்தானத்துடைய புதன் 4 ஆம் இடத்தில் இருக்கிறார். இதனால் ஒருதடவைக்கு இரண்டுதடவை முயற்சி செய்கின்ற காரியங்கள் நல்ல விதமாகவே முடியும். குறிப்பாக, வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை இந்த வாரம் சிறப்பாக இருக்கும். யாரெல்லாம் பெரிய அளவில் உயர வேண்டும் என எண்ணுகிறீர்களோ அவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு, போனஸ் ஆகியவை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. மேலும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறவும், நேர்முகத் தேர்வுகளில் தேர்ந்தெடுக்கப்படவும் அதிக வாய்ப்புகள் உள்ளன. சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு லாபம் வருவது போல் தோன்றினாலும், அது கைக்கு வருவதில் சில தடைகள் இருக்கலாம். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். எதிர்பாராத புதிய நட்புகள் உருவாகும். பழைய நண்பர்களால் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். வெளிநாட்டுத் தொடர்புகளும் சாதகமாக இருக்கும். இந்த வாரம் நீங்கள் சனி பகவானையும் பைரவரையும் வழிபடுவது நல்லது.