எதிரிகளை வெல்வீர்கள்

Update:2025-09-09 00:00 IST

2025 செப்டம்பர் 09-ஆம் தேதி முதல் 2025 செப்டம்பர் 15-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் ஆறாம் இடத்தில் இருப்பதால், எதிரிகளை வெல்வதற்கும், போட்டிகளில் வெற்றி பெறுவதற்கும் வாய்ப்புகள் அதிகம். நீங்கள் போட்டித் தேர்வுகள் அல்லது நேர்காணல்களில் கலந்துகொண்டிருந்தால், வெற்றி அல்லது தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு, புதிய வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. ஆனால், அந்த வேலை உங்களுக்கு முழு திருப்தியை அளிக்காது. இருப்பினும், வேலை என்பது நிச்சயம் கிடைக்கும். ஏற்கனவே கடன் கேட்டு விண்ணப்பித்திருந்தால், அது இந்த வாரம் கிடைக்கும். குறிப்பாக, வீடு, நிலம் அல்லது வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதற்கு கடன் கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு, இந்த வாரம் சுமாராக இருக்கும். சில தொழில் தகராறுகள் ஏற்படலாம். ஆனால், உற்பத்தித் துறையில் இருப்பவர்களுக்கு விற்பனை சிறப்பாக இருக்கும். நண்பர்கள் மூலம் பெரிய அளவில் நன்மைகள் ஏற்படும். நீண்ட நாட்களாக நல்ல ஆண் வேலையாட்களை எதிர்பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு, இந்த வாரம் நல்ல வேலையாட்கள் அமைவார்கள். உயர்கல்வி படிக்க விரும்புபவர்களுக்கும், படிப்பவர்களுக்கும் இந்த வாரம் நல்ல பலன்கள் உண்டு. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு ஓரளவுக்கு லாபம் கிடைக்கும். சனி பகவான் உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் இருப்பதால், பணவசதி இருந்தால் முதலீடு செய்யலாம். இந்த வாரம் ஆஞ்சநேயர் மற்றும் பைரவரை வழிபடுவது மிகவும் நல்லது.

Tags:    

மேலும் செய்திகள்

கவனம் தேவை