முயற்சிக்கு வெற்றி
2025 செப்டம்பர் 30-ஆம் தேதி முதல் 2025 அக்டோபேர் 06-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரத்தில் உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம். அதே சமயம், செலவுகளும் கூடும். குறிப்பாக, எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். ஆனால், உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். நீங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு காரியமும் தாமதமானாலும் நிச்சயம் நிறைவேறும். வீடு அல்லது சொத்து விற்பனை செய்ய முயற்சிப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளது. சொத்து சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் அல்லது ஒப்பந்தங்கள் வெற்றிகரமாக முடியும். இந்த வாரத்தில், உங்கள் வேலையாட்களிடம் கவனமாக இருங்கள். நல்ல வேலையாட்கள் உங்களை விட்டுப் பிரிந்து போக வாய்ப்புள்ளது. வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை, உங்களுக்கு நிலையான வேலை இருக்கும். வேலை இல்லாமல் இருக்க மாட்டீர்கள். வியாபாரம் செய்பவர்கள் இந்த வாரம் பெரிய முதலீடுகளைத் தவிர்க்க வேண்டும். அதிக உழைப்பு இருந்தாலும், வருமானம் குறைவாகவே இருக்கும். பெரிய முதலீடுகள் செய்தாலும், நல்ல லாபம் கிடைக்காது. ஆகையால், இந்த வாரம் அமைதியாக இருங்கள். உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இந்த வாரம் நீங்கள் ஆஞ்சநேயர் மற்றும் சனீஸ்வரரை வழிபடுவது நல்லது.